Monday, February 26, 2024 11:47 am

கெஞ்சிய நயன் நோ சொன்ன லைகா !! அஜித் எடுத்த அதிரடி முடிவு !! ஏகே 62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் ‘துணிவு’ படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்துவிட்ட நிலையில், அந்த நட்சத்திர நடிகரின் அடுத்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அஜித் குமாரின் ‘ஏகே 62’ படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கடந்த ஆண்டு முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் தற்போது அந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அல்லது விஷ்ணுவர்தன் படத்தை இயக்கலாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பையில் தொடங்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பை 35-40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அஜித்திற்கு முன்பு ‘ஆளுமா டோலுமா’, ‘சர்வைவா’ என நடிகருக்கு அடிதடி பாடல்களை கிளப்பிய இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவிருந்தார் அஜித்.
இந்நிலையில், லைகா தயாரிப்பில் உருவாக இருந்த இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் திருப்தி இல்லை என சொல்லப்படும் நிலையில், நயன்தாரா சமரசம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் – ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த துணிவு திரைப்படம், பொங்கலை முன்னிட்டு 11ம் தேதி வெளியானது. விஜய்யின் வாரிசுடன் மோதிய துணிவுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் 200 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அஜித்தின் ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதில் சில அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். ஏகே 62 ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என செய்திகள் வெளியாகி வந்தன. மேலும் அதற்காகவே அஜித் தாடி, மீசை இல்லாமல் புதிய கெட்டப்பில் வலம் வருவதாக சொல்லப்பட்டது. இதனிடையே விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் திருப்தி இல்லை என்றும், அதனால் விக்னேஷ் சிவனை இந்தப் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.

அஜித்துடன் த்ரிஷா, அரவிந்த் சுவாமி, சந்தானம் என மெகா கூட்டணியுடன் ஏகே 62 உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ் சிவன் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவந்தனர். இதனிடையே தான் அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியானது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அடுத்து விஜய்க்காக ஒரு கதையை தயாராக வைத்திருந்தார். தற்போது அந்த கதையில் தான் அஜித் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

முதலில் ஏகே 62 படத்தை இயக்க விக்கிக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு நயன்தாரா தான் காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் இல்லை என்று தகவல் பரவி வருவதால் மீண்டும் நயன் களமிறங்கியுள்ளாராம். அதன்படி, லைகா நிறுவனத்திடமும் அஜித்திடமும் நயன்தாரா பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், நயன் சமரசம் பேசியும் லைகா ரெட் சிக்னல் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கதையில் திருப்தி இல்லாமல் தான் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தும் நோ சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித் கடைசியாக நடித்தார், இது ஜனவரி 11 அன்று திரையரங்குகளுக்கு வந்தது. எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் அஜீத் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ‘துணிவு’ படம் வெளியான இரண்டு வாரங்களில் ரூ.275 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்