Tuesday, April 16, 2024 9:49 pm

சிம்பு பிறந்த அன்று அஜித் ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைஸ் அப்டேட் இதோ !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் 62வது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் ஆதரவுடன் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஏகே 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சமீபத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக ஊகங்கள் பரவி வருகின்றன, அதற்கு பதிலாக, நடிகர் உதயநிதி நடித்த கலக தலைவன் படத்தை கடைசியாக இயக்கிய திரைப்பட தயாரிப்பாளர் மகிழ் திருமேனியுடன் இணைந்து பணியாற்றுவார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் நடிகர், பாடகர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட சிலம்பரசன், திரை உலகில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியது மட்டுமில்லாமல் அவர் எதிர்கொண்ட சவால் மற்றும் அவருடைய பயணம் ரசிகர்களையே வியக்க வைக்கிறது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் 39 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இவருடைய பிறந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்பெஷல் டே ஆக அஜித் மற்றும் விஜய் மாற்ற போகின்றனர். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் அன்று அவர் ரசிகர்களுக்காக பத்து தல படத்தில் சிறப்பான ஒரு நடன தொகுப்பை வெளியிடுகிறார் ஏஆர் ரகுமான்.

இதே நாளில் விஜய் படத்தின் முக்கியமான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. இதே நாளில் ஏகே 62-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டைரக்டர் பெயருடன் வெளிவரும் என கூறப்படுகிறது. சிம்பு பிறந்தநாள் அன்று அஜித் விஜய்யும் சேர்ந்து அப்டேட் கொடுப்பது அந்த நாளையே சிறப்பான நாளாக ரசிகர்களுக்கு மாற்றி இருக்கிறது.

இதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை ஏறி குண்டாக மாறிய சிம்பு, கடந்த ஆண்டில் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஒல்லி கில்லியாக வந்தார். இவருடைய உடல் எடை மாற்றம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்தது.

அவர் எவ்வாறு உடல் எடையை குறைத்தார், இது எப்படி சாத்தியம் என்று பலரும் வியந்தனர். இது குறித்து சிம்புவிடம் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலாக சிம்புவின் பிறந்தநாள் அன்று, அவர் எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்த வீடியோவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு அஜித் மற்றும் விஜய் இருவரின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை சிம்புவின் பிறந்தநாளில் கொடுக்கின்றனர். இந்த தகவல் தற்போது சிம்புவின் ரசிகர்களை குஷிப்படுத்துவது மட்டுமின்றி சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

விக்னேஷ் இயக்கத்தில் தாமதம் குறித்தோ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. மறுபுறம், விக்னேஷ் மற்றும் அஜித் இருவரும் சமீபத்தில் லண்டனுக்கு பறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், எச் வினோத் இயக்கிய அஜித்தின் சமீபத்திய வெளியீடான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்