திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் லாரி ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அச்சரப்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.