30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஅஜித்தின் லைன் ஆப்-ல் இருக்கும் மிக முக்கிய 3 இயக்குனர்கள்!!யாருக்கு அதிக வாய்ப்பு...

அஜித்தின் லைன் ஆப்-ல் இருக்கும் மிக முக்கிய 3 இயக்குனர்கள்!!யாருக்கு அதிக வாய்ப்பு ? ஏகே 63 யாரும் எதிர்பார்க்காத கூட்டணி

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

நடிகர் விஜய்யுடன் தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்குவதன் மூலம் இயக்குனர் அட்லீ புகழ் பெற்றார், மேலும் பிரபல இயக்குனர் தற்போது ஷாருக்கான் நடித்த தனது பாலிவுட் முதல் ‘ஜவான்’ படத்தை இயக்குகிறார். இதற்கிடையில், அஜித்தின் 63வது படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக இணையத்தில் சமீபத்திய சலசலப்பு கூறுகிறது. அட்லீ விஜய்யுடன் பணிபுரிந்தபோது அஜித் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார் என்பதும், இதற்கு முன்பு சில ட்ரோல்களுக்கு இயக்குனர் பதிலடி கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சில அஜித் ரசிகர்கள் இப்போது தங்களுக்கு பிடித்த நடிகருடன் அட்லீ இணைகிறார் என்ற அறிக்கையால் உற்சாகமடைந்துள்ளனர், மேலும் அந்த அறிக்கை உண்மையாக மாறுவதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.


அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்க போகிறார் என்ற மிகப்பெரிய வாக்குவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஏகே 63 படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலில் அதிக வசூல் பெரும் நாயகனாக விஜய் பார்க்கப்பட்டார். அவருக்கு தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பட்டமும் உள்ளது.

ஆனால் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக மோதிக் கொண்டது. இதில் வாரிசை பின்னுக்கு தள்ளி முதல் நாள் கலெக்ஷனில் வசூலை வாரி குவித்தது துணிவு. இதன் மூலம் அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது.

அதாவது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவனை ஓரம் கட்டி வேறு ஒரு இயக்குனரை லைக்கா தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியானது. ஏ கே 63 படத்தையும் லைக்கா தான் தயாரிக்க உள்ளதாக உறுதி பட தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் நம்பர் ஒன் பட்ஜெட் படமாக ஏகே 63 உருவாக இருக்கிறது. அதாவது இதுவரை இந்திய சினிமாவில் வெளியான படங்களில் அதிக செலவில் எடுக்கப்படும் படமாக இந்தப் படம் அமைய உள்ளது. ஆகையால் இதற்கான இயக்குனர்களை தற்போது லைக்கா தேடி வருகிறதாம்.

பிரம்மாண்ட பட்ஜெட் என்றாலே நமக்கு சற்றென்று ஞாபகம் வருவது ராஜமௌலி, ஷங்கர் மற்றும் பிரசாந்த் நீல் தான். இவர்களால் தான் இந்த படத்தின் பட்ஜெட்டை நியாயப்படுத்த முடியும். ஏனென்றால் இதற்கு முன்பு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ஆன பாகுபலி, எந்திரன், கே ஜி எஃப் போன்ற படங்களை இயக்கியவர்கள் இவர்கள்தான்.

அந்தப் படங்களும் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியைத் தந்து வசூலை வாரி கொடுத்தது. ஆகையால் லைக்கா இவர்களுள் ஒருவரை தான் தேர்ந்தெடுக்க உள்ளதாம். ஆனால் இந்த மூன்று இயக்குனர்களுமே தற்போது படங்களில் பிசியாக உள்ளனர். இதற்கு முன்னதாக ஏகே 62 படத்தின் இயக்குனர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

அஜித்தின் பொங்கல் வெளியீடான ‘துணிவு’ பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்துள்ளது, மேலும் விஜய்யின் ‘வரிசு’ படத்துடன் மோதிய போதிலும் இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. அஜித் தற்போது ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க தயாராகி வருகிறார், மேலும் படத்தின் முதல் ஷெட்யூல் பிப்ரவரி கடைசி வாரத்தில் மும்பையில் நடக்க உள்ளது.

சமீபத்திய கதைகள்