26.7 C
Chennai
Tuesday, March 21, 2023
HomeசினிமாAk 62 படத்தின் உண்மை நிலையை பற்றி விக்கி போட்ட இன்ஸ்டா பதிவு !! புகைப்படத்தை...

Ak 62 படத்தின் உண்மை நிலையை பற்றி விக்கி போட்ட இன்ஸ்டா பதிவு !! புகைப்படத்தை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள் !!

Date:

தொடர்புடைய கதைகள்

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய...

தொழில்துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, தாதாவுக்குப் பிறகு கவின் அடுத்த படம் பற்றிய...

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

அஜித்தின் ‘துணிவு’ படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்துவிட்ட நிலையில், அந்த நட்சத்திர நடிகரின் அடுத்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அஜித் குமாரின் ‘ஏகே 62’ படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கடந்த ஆண்டு முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்றும், அதில் இயக்குநர் அட்லீ இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அல்லது விஷ்ணுவர்தன் படத்தை இயக்கலாம். என்று சமூக வலைதளக்கங்களில் செய்திகள் வெளிவந்தன

அஜித் தொடர்ந்து மூன்று முறை வினோத்துடன் கூட்டணி போட்ட நிலையில் துணிவு படத்திற்கு பிறகு புதிய இயக்குனருடன் பணியாற்றலாம் என்று முடிவெடுத்திருந்தார். இதனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் ஏகே 62 படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபகாலமாக இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் ஹீரோயினை தேடி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து அவர் விலகுவதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

அதாவது விக்னேஷ் சிவன் கதையில் சில மாற்றங்கள் செய்து வருவதால் உடனடியாக அஜித் படத்தை அவரால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் லைக்கா தயாரிப்பில் ஏகே 63 படத்தில் விக்னேஷ் சிவன் இணைவார் என கூறப்படுகிறது. இப்போது ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான கழகத் தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62-வது படத்தை இயக்க உள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தையும் லைக்கா ப்ரொடக்சன் தான் தயாரிக்கிறது.

மகிழ்த்திருமேனி அருண் விஜய்யின் தடையறத் தாக்க, தடம் மற்றும் ஆர்யாவின் மீகாமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தடம் படம் அருண் விஜய்யின் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனை ஆக அமைந்தது. இப்போது மிகக் குறுகிய காலத்திலேயே அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்புகள் மகிழ்த்திருமேனிக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படமும் ஒரு போலீஸ் அதிகாரி கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் மிக விரைவில் வெளியிட உள்ளது. ஆனாலும் விக்னேஷ் சிவன் இந்த வாய்ப்பை தற்போது நழுவ விட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விக்கி தனது இன்ஸ்டா பதிவில் அவர் போட்ட பதிவு தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு .அதாவது அந்த புகைப்படத்தில் அஜித் கை கழுவும் புகைப்படத்தை வெளியிட்டு மிக வேதனையுடன் அவர் போட்ட பதிவு தற்போது வைரலாகிவருகிறது

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பையில் தொடங்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பை 35-40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அஜித்திற்கு முன்பு ‘ஆளுமா டோலுமா’, ‘சர்வைவா’ என நடிகருக்கு அடிதடி பாடல்களை கிளப்பிய இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

சமீபத்திய கதைகள்