எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘துணிவு’ ஒரு திருட்டு த்ரில்லர். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ 224 கோடி வசூலித்துள்ளது மற்றும் அதன் இறுதி ஓட்டத்திற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் ரூ 50 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துணிவு படம் பிப்ரவரி 10 ஆம் தேதி OTT இல் டிஜிட்டல் பிரீமியரை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளன.
வெளியாகி மாதம் கடந்த நிலையிலும் இன்றளவும் திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அஜித் புதிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது இதுவரை விஜய்க்கும் அஜித்திற்கும் ஏதோ ஒரு விதத்தில் சிறிய அளவிலான வித்தியாசம் விமர்சனம் மற்றும் வசூலில் இருந்து வந்தது. ஆனால் துணிவு படம் அதை மாற்றியுள்ளது. ஏறக்குறைய விஜயும் அஜித்தும் சமமான அளவில் வந்துள்ளனர்.
அதனால் ரசிகர்களை இதுவரை சந்திக்காத அஜித் இனிமேல் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் எப்பொழுதும் போல நேரடியாக சந்திக்காமல் தனது மேனேஜர் மூலமாகவோ அல்லது நெருங்கிய வட்டாரங்கள் மூலமாகவோ ரசிகர்களுடம் தொடர்பில் இருக்கப் போவதாக கூறியுள்ளாராம்.
ரசிகர் மன்றம் கலைத்தது கலைத்ததுதான். ஆனால் ரசிகர்களுக்கு தேவையானவை அவர்களுக்கு வேறென்ன உதவிகள் வேண்டும் என்பதை தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன் மூலம் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யப்போவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒரு வழியாக அவரிடம் இந்த மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் தல நேரிடையாக களத்தில் இறங்குவார் என்றும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் துணிவு படம் பார்க்க வந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தது அஜித்தை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதனால் இனிமேலும் ரசிகர்களை பார்க்காமல் இருப்பது தவறு என்றும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறிவருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித் கடைசியாக நடித்தார், இது ஜனவரி 11 அன்று திரையரங்குகளுக்கு வந்தது. எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் அஜீத் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்