மும்பையின் பாந்த்ரா பகுதியில் புதன்கிழமையன்று பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து நிறுவன (பெஸ்ட்) பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை பாந்த்ரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.