Saturday, April 20, 2024 3:16 pm

சும்மாவா சொன்னாங்க ULTIMATE ⭐️ னு இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லூக் இதோ !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான காலத்திலிருந்தே பெற்று வரும் பிரபலமும், அன்பும், பாக்ஸ் ஆபிஸ் வசூலையே நொறுக்கியது. முதல் வாரத்தில், டிக்கெட் ஜன்னல்களில் படம் நல்ல வியாபாரம் செய்தது. எச் வினோத் இயக்கிய இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்துள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் நாயகன் விஜய் தான் அவருக்கு தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும் என திமிரு காட்டிய தில் ராஜுவுக்கு அஜித்தின் துணிவு சரியான பதிலடி கொடுத்தது தமிழகத்தில் ஒரே வாரத்தில் 100 கோடியை துணிவு ஈட்டியது.

ஆனால் வாரிசு 90 கோடியை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தமிழகத்தில் எப்போதுமே அஜித் ரியல் ஆட்ட நாயகன் என்பதை காட்டுவதற்காகவே துணிவு திரைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று உலக அளவில் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் துணிவு படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் பிரான்ஸ் நாட்டின் முன்னணி தொலைக்காட்சியில் அஜித்தின் துணிவு படம் ஃபிரென்ச் படங்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், அங்கிருக்கும் திரையரங்குகளில் துணிவு படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து கொண்டிருப்பதாகவும் பேசி உள்ளனர். மேலும் இதுவரை வெளிநாடுகளில் துணிவு 65 கோடியை வசூல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்த முறை துணிவு உலகளவில் மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி துணிவு இளசுகள் விரும்பு வகையில் அதிரடி ஆக்சன் படமாக எடுத்திருப்பது கூடுதல் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே கவர்ந்த வாரிசு துணிவுக்கு முன்பு போட்டி போட முடியாமல் சற்று பின் தங்கிய நிலையே நீடிக்கிறது.

இந்நிலையிலும் வாரிசு படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டதுள்ளது. ஆம், வாரிசு திரைப்படம் இதுவரை ரூ. 60 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வாரிசு திரைப்படம் தமிழகத்தில் ரூ. 72 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இன்னும் ரூ. 12 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்தால் மட்டுமே வாரிசு படம் லாபமாக அமையும் என்கின்றனர்.இந்த வாரம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் பதான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால், வாரிசு படத்தின் வசூல் குறையும் என்றும் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் வரக்கூடிய நாட்களில் வாரிசு படம் தயாரிப்பாளருக்கு லாபமாக அமையுமா? இல்லையா? என்று.

உலகளவில் ரூ. 200 கோடியை துணிவு படம் கடந்துவிட்டதாகவும் அண்மையில் தெரியவந்தது.இந்நிலையில், துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் எச். வினோத்தின் அப்பாவை திரையரங்கிற்கு அழைத்து மரியாதை செய்துள்ளனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இது தான் உண்மையான வெற்றி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது இதோ உங்கள் பார்வைக்கு


இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் குமார் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தை துனிவு குறிக்கிறது. ஜனவரி 11ஆம் தேதி வெளியான இப்படத்தில் துன்வி ஆன்டி ஹீரோவாக நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்