26 C
Chennai
Sunday, February 5, 2023
Homeசினிமாகாட்டுத்தனமாக வைரலாகும் துணிவு படத்தின் BGM-கள் !!வீடியோவால் ஆட்டம் கண்ட இணையதளம்

காட்டுத்தனமாக வைரலாகும் துணிவு படத்தின் BGM-கள் !!வீடியோவால் ஆட்டம் கண்ட இணையதளம்

Date:

தொடர்புடைய கதைகள்

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’...

கடந்த ஆண்டு வெளியான ‘மாமனிதன்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக...

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி...

2023 தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிஸியான ஆண்டாகத் தெரிகிறது, ஏனெனில் பெரிய...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் முதல் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட்...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும்...

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏகே 62 படத்தில்...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள...

லோகேஷ் இயக்கிய விக்ரம் படமே மகிழ் திருமேனி படத்தின்...

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக 'தளபதி 67'...

எச் வினோத் இயக்கிய, வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘துணிவு’ திரைப்படம் அதிரடி காட்சிகளால் நிரம்பியுள்ளது, அதே நேரத்தில் அஜித் ஒரு ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த பாத்திரத்தை அளித்து பார்வையாளர்களை ஈர்க்கிறார். மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, விஸ்வநாத், தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜிப்ரானின் இசை படத்தை நன்றாக உயர்த்தியுள்ளது.

படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. துணிவு படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை பார்க்க முடிந்தது. அவரது நடிப்பு சிறப்பாக ப்ரஸ்ட் கிளாஸ் இருந்தது, கதையும் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

துணிவு திரைப்படத்தை எதிர்த்து வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அந்தப் படமும் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் வசூலில் யார் கை ஓங்கி இருப்பதை தெரிந்து கொள்ள மக்களும், மீடியாக்களும் அதிகமாகவும் காட்டியது தமிழகத்தில் அஜித்தின் துணிவு கை அதிக வசூலை அள்ளி முதல் இடத்தை பிடித்தது.

மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் உலக அளவில் அதிக வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை அஜித் துணிவு திரைப்படம் உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அஜித்தின் பழைய ரெக்காடான வலிமை மற்றும் விசுவாசத்தின் வசூல் சாதனை முறையடித்து ஆல் டைம் பெஸ்ட் வசூல் சாதனை என்கின்ற பட்டத்தை துணிவு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துணிவு படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 266 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் குடியரசு தின விடுமுறை உள்ள நிலையில், வாரிசு படம் மீண்டும் வசூல் வேட்டை நடத்தும் என்றும் இந்த வார இறுதியிலும் பெரிய தமிழ் படங்கள் வெளியாகாத நிலையில், 3வது வாரமும் துணிவு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில் “துணிவு படத்தின் 33 பிண்ணனி இசை தீம் கோர்வைகளின் பெயர்களை வெளியிட்டு விரைவில் இவை அனைத்தும் வெளியாகும்” என ஜிப்ரான் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் துணிவு படத்தில்இசை தீம் தற்போது வெளியாகி இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு அடுத்த பின்னணி இசை கோர்வை வெளியீட்டை எதிர் நோக்கி உள்ளனர்.

அஜீத் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான காலத்திலிருந்தே பெற்று வரும் பிரபலமும், அன்பும், பாக்ஸ் ஆபிஸ் வசூலையே நொறுக்கியது. முதல் வாரத்தில், டிக்கெட் ஜன்னல்களில் படம் நல்ல வியாபாரம் செய்தது. எச் வினோத் இயக்கிய இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்துள்ளது.

சமீபத்திய கதைகள்