Thursday, March 28, 2024 10:02 pm

அயல் நாட்டையே அதிரவைத்த 😎 அஜித்தின் துணிவு 🔥🔥! பாராட்டிய அமைச்சர் 👏 யார் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான காலத்திலிருந்தே பெற்று வரும் பிரபலமும், அன்பும், பாக்ஸ் ஆபிஸ் வசூலையே நொறுக்கியது. முதல் வாரத்தில், டிக்கெட் ஜன்னல்களில் படம் நல்ல வியாபாரம் செய்தது. எச் வினோத் இயக்கிய இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்துள்ளது.

படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. துணிவு படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை பார்க்க முடிந்தது. அவரது நடிப்பு சிறப்பாக ப்ரஸ்ட் கிளாஸ் இருந்தது, கதையும் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

துணிவு திரைப்படத்தை எதிர்த்து வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அந்தப் படமும் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் வசூலில் யார் கை ஓங்கி இருப்பதை தெரிந்து கொள்ள மக்களும், மீடியாக்களும் அதிகமாகவும் காட்டியது தமிழகத்தில் அஜித்தின் துணிவு கை அதிக வசூலை அள்ளி முதல் இடத்தை பிடித்தது.

மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் உலக அளவில் அதிக வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை அஜித் துணிவு திரைப்படம் உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அஜித்தின் பழைய ரெக்காடான வலிமை மற்றும் விசுவாசத்தின் வசூல் சாதனை முறையடித்து ஆல் டைம் பெஸ்ட் வசூல் சாதனை என்கின்ற பட்டத்தை துணிவு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துணிவு படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 266 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் குடியரசு தின விடுமுறை உள்ள நிலையில், வாரிசு படம் மீண்டும் வசூல் வேட்டை நடத்தும் என்றும் இந்த வார இறுதியிலும் பெரிய தமிழ் படங்கள் வெளியாகாத நிலையில், 3வது வாரமும் துணிவு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கிட்டத்தட்ட 250 கோடிகள் வசூல் செய்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் வெளியான இந்த படத்தை பல்வறு இலங்கையில் பாராட்டி வருகின்றனர். இலங்கையின் சமூக மேம்பாட்டுதுறை அமைச்சர் ரஞ்சன் ராமனாயகே. அவர் படத்தினை பார்த்து பாராட்டியுள்ளார். மேலும், இது ஒரு ஆக்சன் கலந்த மசாலா படமாக இருந்தாலும் மக்களுக்கு நற்ச்செய்தியை கூறியுள்ளது. என பாராட்டியுள்ளார் அமைச்சர்.

எச் வினோத் இயக்கிய, வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘துணிவு’ திரைப்படம் அதிரடி காட்சிகளால் நிரம்பியுள்ளது, அதே நேரத்தில் அஜித் ஒரு ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த பாத்திரத்தை அளித்து பார்வையாளர்களை ஈர்க்கிறார். மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, விஸ்வநாத், தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜிப்ரானின் இசை படத்தை நன்றாக உயர்த்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்