அஜீத் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான காலத்திலிருந்தே பெற்று வரும் பிரபலமும், அன்பும், பாக்ஸ் ஆபிஸ் வசூலையே நொறுக்கியது. முதல் வாரத்தில், டிக்கெட் ஜன்னல்களில் படம் நல்ல வியாபாரம் செய்தது. எச் வினோத் இயக்கிய இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்துள்ளது.
உலகளவில் வசூல் கணக்கு எல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் யாருடைய வசூல் அதிகம் என்று பார்க்கலாம். கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் இதுவரை தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் துணிவு திரைப்படம் இதுவரை ரூ. 106 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் வாரிசு படம் ரூ. 105 கோடி வரை வசூல் செய்து சற்று பின்தங்கி இருக்கிறது. இதுவே இன்றைய வசூல் நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் துணிவு படத்திற்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் துணிவு படத்தின் வசூல் டல் அடிப்பது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவினாலும் கடைசியில் அஜித்தின் துணிவு தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.
France’s Top Rated TV Channel Discussing About #Thunivu & Ajith’s Screen Presence/Stardom !!
🔥🔥🔥
Proud Moment For Indian Cinema !! pic.twitter.com/xAqsgt8j6F— Arun (@ArunAk2206) January 21, 2023
எனவே எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொள்ளும் தல தளபதி இருவரில் யார் நம்பர் ஒன் என பல நாட்களாக இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த வசூல் விவரத்தை வைத்தே அஜித்தான் நம்பர் ஒன் என தல ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.
இந்நிலையில் பிரான்சில் அஜித் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருப்பதாக அந்த நாட்டு தொலைக்காட்சியில் கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் முக்கிய நகர்களில் பிரெஞ்ச் படங்களைவிட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அஜித்குமாருக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்கள் துணிவு படம் ஹவுஸ்புல் காட்சிகளில் ஓடுவது மிகப்பெரிய விஷயம் எனவும் பிரான்ஸ் தனியார் தொலைக்காட்சியில் பேசப்பட்டுள்ளது.
இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் குமார் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தை துனிவு குறிக்கிறது. ஜனவரி 11ஆம் தேதி வெளியான இப்படத்தில் துன்வி ஆன்டி ஹீரோவாக நடித்துள்ளார்.