தென் சென்னையில் மருத்துவமனை வளாகம், மழைநீர் வடிகால், புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஆதம்பாக்கம், மணப்பாக்கம், கிங் மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த அவர், ஆதம்பாக்கம் நகர இணைப்பு சாலை, நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். இப்பணிகள் மூலம் முதல்வரிடம் அதிகாரிகள் வரைபடத்தை கொண்டு சென்றனர்.