28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

கோலிவுட்டில் பற்றி எரியும் Ak 62 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !! அஜித்திற்காக ரிஸ்க் எடுக்கும் விக்கி !!

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் அஜீத் குமாரின் ‘AK62’ படத்தை இயக்கவுள்ளார், இது விரைவில் திரைக்கு வரவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘துணிவு’ படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள நிலையில், விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்கும் படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வெறித்தனமான இரண்டு வில்லன்கள் இருக்க போவதாக தெரிய வந்துள்ளது. இரண்டு வில்லன்களும் இவர்களின் முந்தைய படத்தில் வில்லனாக நடித்து மிகப் பிரம்மாண்டமாக பெரிய அளவில் பெயர் வாங்கியவர்கள். இந்த வில்லன் கதாபாத்திரத்தில் அஜித் மற்றும் அரவிந்த்சாமி நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. இவர்கள் இருவரும் 25 வருஷத்துக்கு முன்னதாகவே இணைந்து நடித்துள்ள படம் பாசமலர்.

இதுக்கு அப்புறம் இவர்கள் கூட்டணி இப்பொழுது இணைகிறது. மேலும் சந்தானம் சமீப காலமாகவே ஹீரோவாக நடித்ததிலிருந்து காமெடியனாக நடிக்க போவதில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் இந்த படத்திற்கு சந்தானம் ஓகே சொல்லிட்டாராம், அதிலிருந்து இவருடைய கதாபாத்திரம் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக தான் இருக்கும் என்று பேசப்படுகிறது.

மேலும் விக்னேஷ் சிவன் படத்தில் பொதுவாக அனிருத் தான் இசையமைத்திருப்பார். அதே மாதிரி இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போவதாக வெளியாகி உள்ளது. இன்னும் இந்தப் படத்திற்கு இரண்டு ஜோடிகள் இருப்பதாகவும் அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாகவும் பேசப்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு ஜோடி உடன் கதையில் அஜித் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவனின் முந்தைய படங்கள் அனைத்தும் காதல் கதையை மையமாகக் வைத்து எடுத்த படம். அந்த வகையில் விக்னேஷ் சிவன் ஒரு அஜித் மாதிரியான மாஸ் ஹீரோவை வைத்து எடுக்க கூடிய படம் எப்படி இருக்கும் என்று பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது காதல் கலந்த ஆக்ஷன் படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித் மங்காத்தாவில் வில்லன் கதாபாத்திரத்திலும் மற்றும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி நெகட்டி கேரக்டரையும் நடித்திருப்பார்கள். அதே அளவுக்கு இந்தப் படத்திலும் இவர்களின் வில்லத்தனத்தை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கான படபிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது.

ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்தாலும் சமூகம் சார்ந்த கருத்தை இப்படம் கூறியுள்ளதால் பொதுவான ரசிகர்களும் இப்படத்திற்கு ஆதரவு தருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை அடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.ஆனால் தற்போது வந்த தகவலின் படி இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக தெரிகின்றது. இதன் மூலம் விக்னேஷ் சிவன் முதல்முறையாக ஆக்ஷன் படத்தை எடுக்கவுள்ளார். எனவே விக்னேஷ் சிவனின் இந்த புது முயற்சி அவருக்கு வெற்றியை தேடி தருமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான 62 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக பிரபல நாளிதழில் செய்தி வந்துள்ளது இதோ உங்கள் பார்வைக்கு

இப்படத்தின் படப்பிடிப்பை 35-40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். த்ரிஷா அணியில் இணைவார் என்ற யூகங்கள் நிலவி வரும் நிலையில், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார் என்று முன்பே தெரிவித்திருந்தோம். பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக இருந்து வரும் நடிகர் சந்தானமும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்திற்கு முன்பு ‘ஆளுமா டோலுமா’, ‘சர்வைவா’ என நடிகருக்கு அடிதடி பாடல்களை கிளப்பிய இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT தளம் வாங்கியுள்ளது.

சமீபத்திய கதைகள்