29.4 C
Chennai
Sunday, March 26, 2023

ரசிகர் மறைவு செய்தி கேட்டதும் நடிகர் அஜித் செய்த விஷயம !! வைரலாகும் தகவல் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் போர் காட்சி வீடியோ...

இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து தனுஷ் தனது அடுத்த படத்திற்கு 'கேப்டன்...

அஜீத் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர வசூல் செய்து வருகிறது, மேலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எச்.வினோத்தின் இயக்கத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. படத்திற்கு முதல் நாளே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ‘துணிவு’ திரையரங்குகளில் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைத்தாலும், படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. தங்களுக்குப் பிடித்த காட்சிகளை n முறை டிஜிட்டல் முறையில் ரசிக்கலாம். படத்தின் OTT வெளியீட்டிற்கான நடவடிக்கைகளையும் தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளதாகவும், அஜித்தின் படம் பிப்ரவரி 10 முதல் ஸ்ட்ரீமிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கங்களை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ணம் ஓட்டத்திற்கு உகந்ததில்லை. சமுதாயப் பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்,

நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதை சுட்டிக்காட்டி அஜித் தலைமையின் கீழ் கசெயல்பட்டு வந்த நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் என தெரிவித்து தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தார் அஜித்குமார். பல நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி வந்தவர்களுக்கு மத்தியில் ஒரு முன் உதாரணமாக அமைந்தது அஜித்தின் இந்த செய்லபாடுகள்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் துணிவு, மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் ஒரே தேதியில் வெளியாகி பல இடங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. மேலும் படத்தை காண்பதற்கு திரையரங்கில் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் பல திரையரங்குகள் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறியது.

அந்த வகையில் சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படத்தை முதல் ஷோ பார்க்க சென்ற ஒரு அஜித் ரசிகர், அங்கு நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியவாறு கீழே குதித்த போது அந்த 19 வயது இளைஞனுக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார், ஆனால் அஜித் துக்கம் விசாரிக்க வரவில்லை. அந்த ஏழை குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்து வந்த நிலையில், இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். அஜித் ரசிகரின் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க சென்றாலோ, அல்லது வெளிப்படையாக உதவி செய்தாலோ, அது தன்னுடைய ரசிகரின் மரணத்தை ஊக்குவிப்பது போன்று அமைந்துவிடும்.

ஆகையால் விரைவில் சத்தமே இல்லாமல் பாதிப்படைந்த அந்த ரசிகரின் குடும்பத்திற்கு எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்களை நேரில் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து, மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பஞ்சு பேசி தன்னுடைய ரசிகர்களை தூண்டிவிட்டு ரசிகர்களை கேடயமாக பயன்படுத்தும் விஜய் போன்றவர்கள் அஜித்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கின்றது என்கின்ற கருத்தும் நிலை வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் குமார் அவரின் ரசிகர் இறந்ததை நினைத்து மிகவும் வேதனை பட்டாராம். இதனால் தான் அவர் துணிவு படத்தின் வெற்றியை கூட பெரிதாக கொண்டாடவில்லை என்று ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரிம் சுந்தர் கூறியுள்ளார்.

அஜீத் தனது ஸ்டைலான மற்றும் மாஸ்-லோடட் பாத்திரத்தில் ஒரு கெட்டியாக ரசிகர்களை திகைக்க வைத்தார், மேலும் அவரது புதிய தோற்றம் மிகவும் ஈர்க்கிறது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, விஸ்வநாத் மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் கச்சிதமான பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள், அதே நேரத்தில் ஜிப்ரானின் இசை ஆக்‌ஷன் காட்சிகளை நன்றாக உயர்த்துகிறது.

சமீபத்திய கதைகள்