மாநிலத்தில் உள்ள ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, ஸ்ரீனிவாசா போன்ற தனியார் பால் விற்பனையாளர்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளனர்.
தினத்தந்தி அறிக்கையின்படி, விலை உயர்வு பின்வருமாறு:
டபுள் டோன்ட் பால் லிட்டருக்கு ரூ.48ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டோன்டு பால் லிட்டருக்கு ரூ.50ல் இருந்து ரூ.52 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தரப்படுத்தப்பட்ட பால் ரூ.62ல் இருந்து ரூ.64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஃபுல் க்ரீம் மில்க் ரூ.70ல் இருந்து ரூ.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தயிர் விலை ரூ.72ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது.
புதிய விலை இன்று (ஜன. 20) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.