Saturday, April 1, 2023

அஜித்தின் ஆல் டைம் பெஸ்ட் வசூல் துணிவு இத்தனை கோடியா ? சர்வே ரிப்போர்ட் இதோ

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜித் குமாரின் துணிவு திரைப்படம் இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வியாபாரம் செய்து வருகிறது. இப்படம் தற்போது உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து வருகிறது. தயாரிப்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ எண்களை வெளியிடவில்லை. ஜனவரி 19 அன்று, படம் வசூலில் சரிவைக் கண்டது மற்றும் இந்தியாவில் 3 கோடிக்கும் குறைவாகவே வசூலித்தது. இருப்பினும், இது எதிர்பார்க்கப்பட்டதாகவும், வார இறுதியில் மீண்டும் வேகத்தை அதிகரிக்கும் என்றும் வர்த்தக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த 9 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே துணிவு திரைப்படம் ரூ. 98 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ. 97 கோடியும் வசூல் செய்துள்ளது.இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் துணிவு திரைப்படத்தின் வசூல் முதலிடத்தை அப்படியே தக்க வைத்துள்ளது என தெரிகிறது.

அதிலும் துணிவு படத்தின் மொத்த வசூலில் இருந்து 30 சதவீதம் வாரிசு பின்தங்கி இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. துணிவு படம் முதல் நாளில் 24.59 கோடியை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்த நிலையில், படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அலைமோதியது.

இதைத்தொடர்ந்து மூன்றே நாட்களில் 100 கோடியை கடந்த துணிவு ஒரே வாரத்தில் 111.83 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி யாரும் எதிர்பாராத அளவிற்கு நேற்றைய தினத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடியும், உலக அளவில் 200 கோடியையும் வசூலித்தது. இதனால் துணிவு படத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் வாரிசு படம் ஒரு வாரத்தில் வெறும் 70.34 கோடியை வசூலித்திருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் துணிவு படத்திற்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் துணிவு படத்தின் வசூல் டல் அடிப்பது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவினாலும் கடைசியில் அஜித்தின் துணிவு தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.

எனவே எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொள்ளும் தல தளபதி இருவரில் யார் நம்பர் ஒன் என பல நாட்களாக இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த வசூல் விவரத்தை வைத்தே அஜித்தான் நம்பர் ஒன் என தல ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களுக்குப் பிறகு, அஜித்குமார் மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் கைகோர்த்தார். துனிவு ஒரு திருட்டு த்ரில்லர், இது அஜித்தை எதிர் ஹீரோவாகக் காட்டுகிறது.

இப்படத்தில் மஞ்சு வாரியர், அமீர், பவனி, சிபி, வீரா, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள துனிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கையாண்டுள்ளார்.

சமீபத்திய கதைகள்