Saturday, April 1, 2023

AK62 வில் இணைய போகும் முக்கிய பிரபலம் !!! யாரும் எதிர்ப்பார்க்காத பிரமாண்ட கூட்டணி !! ரசிகர்கள் கொண்டாட்டம்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

விக்னேஷ் சிவனுடன் அஜித் குமாரின் அடுத்த படம் மும்பையில் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று நாங்கள் தெரிவித்தோம். ஐஸ்வர்யா ராயுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்திய சலசலப்பு. கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுக்கு அப்புறம் இவர்கள் கூட்டணி இப்பொழுது இணைகிறது. மேலும் சந்தானம் சமீப காலமாகவே ஹீரோவாக நடித்ததிலிருந்து காமெடியனாக நடிக்க போவதில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் இந்த படத்திற்கு சந்தானம் ஓகே சொல்லிட்டாராம், அதிலிருந்து இவருடைய கதாபாத்திரம் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக தான் இருக்கும் என்று பேசப்படுகிறது.

மேலும் விக்னேஷ் சிவன் படத்தில் பொதுவாக அனிருத் தான் இசையமைத்திருப்பார். அதே மாதிரி இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போவதாக வெளியாகி உள்ளது. இன்னும் இந்தப் படத்திற்கு இரண்டு ஜோடிகள் இருப்பதாகவும் அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாகவும் பேசப்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு ஜோடி உடன் கதையில் அஜித் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவனின் முந்தைய படங்கள் அனைத்தும் காதல் கதையை மையமாகக் வைத்து எடுத்த படம். அந்த வகையில் விக்னேஷ் சிவன் ஒரு அஜித் மாதிரியான மாஸ் ஹீரோவை வைத்து எடுக்க கூடிய படம் எப்படி இருக்கும் என்று பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது காதல் கலந்த ஆக்ஷன் படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித் மங்காத்தாவில் வில்லன் கதாபாத்திரத்திலும் மற்றும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி நெகட்டி கேரக்டரையும் நடித்திருப்பார்கள். அதே அளவுக்கு இந்தப் படத்திலும் இவர்களின் வில்லத்தனத்தை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கான படபிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது.

ஏகே 62 படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. முன்னதாக, இந்த படத்தில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும், த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருவதாகவும் யூகங்கள் வந்தன.


வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜித்துடன் மூன்றாவது முறையாக நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இதற்கிடையில், அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எச்.வினோத் இயக்கிய துணிவு ஜனவரி 11 அன்று வெளியானது. வங்கி கொள்ளை திரில்லர் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்