28.3 C
Chennai
Thursday, March 23, 2023

உலகம் முழுவதும் அடித்து நொறுக்கிய துணிவு படத்தின் வசூல் ரிப்போர்ட் !! ஹாட்ரிக் ஹிட் அடித்த அஜித்

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எச்.வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமான இப்படத்தில் அஜித் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 1 வாரத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ200 கோடி வசூலித்துள்ளது. சமூக வலைதளங்களுக்கு எடுத்துச் சென்ற தயாரிப்பாளர் போனி கபூர், இப்படம் உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் ஆனது என்று கூறினார்.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி வெளியானது. ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படம், வங்கிகளில் நடக்கும் பண மோசடியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் சந்தித்த மோசமான விமர்சனங்களுக்கு அஜித் – வினோத் காம்போ, இந்தப் படத்தில் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள அஜித் ஆக்‌ஷனில் ஒன்மேன் ஷோ காட்டியுள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதேபோல், அஜித்தின் துணிவுக்கு போட்டியாக விஜய்யின் வாரிசு திரைப்படமும் கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. இரண்டு படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், விஜய்யின் வாரிசு 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு 5 நாட்களில் 175 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

பொங்கல் விடுமுறை தினங்களான 15, 16, 17 என கடந்த 3 நாட்களில் துணிவு படத்துக்கான டிக்கெட் புக்கிங் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. அனைத்து காட்சிகளுமே ஹவுஸ்புல் ஆனதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் 7 நாட்கள் முடிவில் துணிவு திரைப்படம் 200 கோடி வசூலை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே வாரத்தில் துணிவுக்கு கிடைத்துள்ள இந்த வசூல், அஜித் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.முதல் நாளில் இருந்தே துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 14 கோடியும் வசூலித்தது. அதற்கடுத்த நாட்களிலும் சீரான வசூலை வாரி குவித்த துணிவு, இதுவரை 96 கோடியை கடந்துள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷனை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் படங்களில், துணிவு தான் வசூலில் சிறப்பான சம்பவம் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களுக்குப் பிறகு, அஜித்குமார் மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் கைகோர்த்தார். துனிவு ஒரு திருட்டு த்ரில்லர், இது அஜித்தை எதிர் ஹீரோவாகக் காட்டுகிறது. அஜீத் மற்றும் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், சிபி, பாவ்னி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் மஞ்சு வாரியர், அமீர், பவனி, சிபி, வீரா, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள துனிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கையாண்டுள்ளார்.

சமீபத்திய கதைகள்