Saturday, April 1, 2023

ரெகார்ட் சாதனை !!200 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் துணிவு!!

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

‘துணிவு’ படத்தில் அஜீத் ஒரு மோசமான கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் எச்.வினோத்தின் இயக்கம் இயக்குனருக்கு சிறந்ததாக அமையவில்லை. மஞ்சு வாரியர், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதற்க்கு முன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை 7 நாட்களில் ரூ. 82 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால், தற்போது 6 நாளில் ரூ. 85 கோடி வசூல் செய்து வலிமை படத்தின் சாதனையை துணிவு படம் முந்தியுள்ளது.

அதுமட்டுமின்றி 6 நாட்களில் உலகளவில் ரூ. 175 கோடி வரை வசூல் செய்து மற்றொரு சாதனையை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ளது.மேலும் வெளிநாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 45 கோடிக்கும் மேல் துணிவு திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே அஜித்தின் சினிமா வாழ்க்கையில் சிறந்த வசூல் என்கின்றனர்.


படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி இருந்தது, 7 நாள் முடிவடைந்த நிலையில் படம் மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரிசு படம் தெலுங்கு சாயலில் குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதுவே துணிவு படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுத்திருந்தனர். வலிமை படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் படத்தை செதுக்கியுள்ளார் வினோத்.

இதனால் வாரிசை ஓரம் கட்டிய திரையரங்கு உரிமையாளர்கள் துணிவு படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கி உள்ளனர். அதன்படி படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் இன்று அஜித்தின் துணிவு படத்திற்கு 1384 காட்சிகள் திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் துணிவு படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் வாரிசு படத்திற்கு 912 காட்சிகள் மட்டுமே இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது ஆட்டநாயகனாக அஜித் முன்னேறி உள்ளார். மேலும் தொடர்ந்து துணிவு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் வரும் நாட்களில் இன்னும் அதிக காட்சிகள் ஒதுக்கப்படும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

துணிவு படத்தை எச் வினோத் எழுதி இயக்குகிறார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.

சமீபத்திய கதைகள்