அஜீத், மஞ்சு வாரியர் தவிர, சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி, பாவ்னி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எச்.வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமான இப்படத்தில் அஜித் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 1 வாரத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ.175 கோடி வசூலித்துள்ளது. சமூக வலைதளங்களுக்கு எடுத்துச் சென்ற தயாரிப்பாளர் போனி கபூர், இப்படம் உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் ஆனது என்று கூறினார்.
ஜனவரி 11ம் தேதி வெளியான நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் காணும் பொங்கலான இன்று வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பல திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.நடிகர் அஜித் ஆக்ஷனில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை தெறிக்கவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு படத்தை இந்த பொங்கலுக்கு பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
அஜித், மஞ்சு வாரியரை கடந்து பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் மற்றும் பிளாஷ்ஃபேக்கில் வரும் ‘கனா’ தர்ஷன் உள்ளிட்டவர்களின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.விமர்சனங்களை எல்லாம் விளாசி எடுக்கும் அளவுக்கு இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் எனும் புனை பெயருடன் முதல் பாதி முழுக்க வங்கியை தன் வசம் வைத்துக் கொண்டு அஜித் போடும் ஆட்டத்தை பார்த்தாலே போதும் அவரது ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்து விடுவார்கள். இதே போல அஜித்தின் லுக் அடுத்தடுத்த படங்களிலும் ரசிகர்களை ஈர்த்தால் போதும் ஏகப்பட்ட வசூலை உலகம் முழுக்க படம் கலெக்ஷன் செய்யும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.
துணிவு படம் புதன் கிழமை வெளியான நிலையில் முதல் நாள் ரசிகர்கள் காட்சி அட்டகாசமான வசூலை வாரிக் குவித்தது. அதன் பிறகு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கொஞ்சம் வசூல் சரிவை சந்தித்த நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என இன்று வரை திரையரங்கம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறி துணிவு படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
இந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு இரு படங்களும் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டன. விஜய்யின் வாரிசு அதிகாரப்பூர்வமாக 150 கோடி ரூபாயை 5 நாட்களில் கடந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்து விட்டது. ஆனால், இந்த பக்கம் போனி கபூர் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்களில் துணிவு திரைப்படம் 175 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.
மேலும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரிசு படம் தெலுங்கு சாயலில் குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதுவே துணிவு படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுத்திருந்தனர். வலிமை படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் படத்தை செதுக்கியுள்ளார் வினோத்.
இதனால் வாரிசை ஓரம் கட்டிய திரையரங்கு உரிமையாளர்கள் துணிவு படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கி உள்ளனர். அதன்படி படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் இன்று அஜித்தின் துணிவு படத்திற்கு 1384 காட்சிகள் திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் துணிவு படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் வாரிசு படத்திற்கு 912 காட்சிகள் மட்டுமே இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது ஆட்டநாயகனாக அஜித் முன்னேறி உள்ளார். மேலும் தொடர்ந்து துணிவு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் வரும் நாட்களில் இன்னும் அதிக காட்சிகள் ஒதுக்கப்படும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை பார்த்து சிம்பு தல செஞ்சு ஓவர் சீன் எல்லாம் செமையா ஒர்க் ஆகியுள்ளது வேற லெவல் மங்காத்தா 2 படத்தை பார்த்த மாதிரி உள்ளது என பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார் .இந்த செய்தி தற்போது செம்ம வைரலாகி வருகிறது .
பத்துதல இப்படத்தில் சிம்புவைத் தவிர கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ஜோ மல்லோரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை ஜாம்பவான் சிம்பு ஐந்தாவது முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.