காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினத்தந்தி செய்தியின்படி, மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் மற்றும் பிற பகுதிகளுக்கு மக்கள் குடும்பத்துடன் கடற்கரை மற்றும் பிற சுற்றுலா தலங்களில் பொங்கல் கொண்டாட வசதியாக சிறப்புப் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.