தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்எம்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி 16 முதல் ஜனவரி 20 வரை வறண்ட வானிலை நிலவும். உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் இரவில் ஓரிரு இடங்களில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும்.
“சென்னையைப் பொருத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான மூடுபனி இருக்கும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.