28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

தல சேஞ்ச் ஓவர்💥!!இனி சால்ட் அண்ட் பேப்பர் லூக்குக்கு Bye Bye சொன்ன அஜித் 😎 !! வைரலாகும் தகவல் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

2023 ஆம் ஆண்டிற்கான உரிமம் பெற்ற தமிழ் உள்ளடக்கத் தொகுப்பின் ஒரு பகுதியாக 15 தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று திங்களன்று Netflix அறிவித்தது. பொங்கல் பண்டிகையைக் குறிக்கும் வகையில், Netflix அவர்களின் சமூக ஊடக சேனல்களில் 15 தலைப்புகளைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கியது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆதரவுடன் சில பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பல படங்களின் பட்டியலில் அடங்கும். விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ஏகே 62 இந்தப் பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம். லைகா புரொடக்‌ஷனின், சந்திரமுகி 2, புரொடக்‌ஷன் எண் 18, புரொடக்‌ஷன் எண் 20, மற்றும் புரொடக்‌ஷன் எண் 24 ஆகியவை நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட மற்ற படங்கள்.

இந்நிலையில் இன்று ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது. மேலும் அஜித்தின் ஏகே 62 படத்தில் முதலாவதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பின்பு திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

விக்னேஷ் சிவனின் ஈகோவால் திரிஷா இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ஏகே 62 படத்திற்கு கதாநாயகிக்காக பல நடிகைகளை வலை வீசி தேடி வந்தார் விக்னேஷ் சிவன். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

மேலும் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அஜித்துக்கு உண்டான காட்சிகளை படமாக்கலாம் என்று விக்னேஷ் சிவன் திட்டம் தீட்டி இருந்தார். இப்போது ஒரு வழியாக ஏகே 62 படத்திற்கு கதாநாயகியை விக்னேஷ் சிவன் புக் செய்து விட்டாராம். கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறார்

அதாவது 2000 ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபுவும், மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார்கள். இந்நிலையில் ஏகே 62 படத்தில் முதல் முறையாக அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த சூழலில் இப்போது மீண்டும் தமிழ் படமான ஏகே 62 படத்தில் ஐஸ்வர்யா ராய் இணைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் வருகின்ற தீபாவளிக்கு விஜய்யின் தளபதி 67 மற்றும் அஜித்தின் ஏகே 62 படங்கள் மோதிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது வெளியான வாரிசு, துணிவை காட்டிலும் இந்த படங்கள் வேற லெவலில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல், பல ஆண்டுகளாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த தல தற்போது இந்த படத்திற்க்காக தலை முழுவதும் கலரிங் செய்துவிட்டு இளமையாக தலை தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் தல ரசிகர்களுக்கு வரும் தீபாவளி தல தீபாவளிதான்.

மற்ற பெரிய படங்களில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே.சூர்யாவின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் நடித்த பா ரஞ்சித் இயக்கிய தங்கலன் மற்றும் உதயநிதி ஸ்டாலின்-மாரி செல்வராஜ் நடித்த மாமன்னன். விஷ்ணு விஷாலின் ஆர்யன், விக்ரம் பிரபு நடித்த இரகுபற்று, சமுத்திரக்கனி நடித்த தலைகூத்து, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா, ஜெயம் ரவி-நயன்தாரா நடித்த இறைவன், கார்த்தியின் ஜப்பான், தனுஷ் நடித்த வாத்தி ஆகிய படங்கள் நெட்ரிக் ரிலீஸுக்குப் பிறகு வெளியாகும் மற்ற படங்கள்.

சமீபத்திய கதைகள்