‘துனிவு’ திரைப்படம் வங்கி பின்னணியில் உருவாகி வங்கித் துறையில் நடக்கும் மோசடிகளைப் பற்றிய செய்தியை அனுப்புகிறது. அஜித்துடன் எச் வினோத்தின் மூன்றாவது படம் அவர்களின் முந்தைய வெளியீடை விட வெற்றிகரமான ஒன்றாகும், மேலும் முன்னணி நடிகர் ரசிகர்களை கவர எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அஜித்திற்காக ஜிப்ரானின் முதல் இசை நன்றாக வேலை செய்தது, அதே நேரத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் பொருத்தமாக இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் ஒரு பேங்கில் நடக்கக்கூடிய மோசடியை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்து கூறும் ஒரு திரைப்படமாக அமைந்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படமும் ஒன்றுடன் ஒன்று சளைத்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறது இதனை தொடர்ந்து துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் துணிவு திரைப்படம் வாரிசை விட அதிக வசூலை ஈட்டி வருகிறது.
அந்த வகையில் துணிவு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவில் இந்தியா முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் துணிவு திரைப்படம் 2023 ஆண்டில் நூறு கொடிக்கு மேல் வசலித்த முதல் திரைப்படமாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் ஓரளவு கவனத்தை வென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ரசிகர்கள் கொண்டாட கூடிய திரைப்படத்தை உருவாக்குவாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.
இதை தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் விஜயின் தளபதி 67 திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது இதனால் மறுபடியும் அஜித், விஜய் மோத தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது ஆனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட சில சங்கடங்களால் விஜய், அஜித் மறுபடியும் மோத மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அஜித் கெரியரில் ஓவர்சீஸில் மிகப்பெரிய வசூல் செய்த படம் துணிவு என்பது இப்போதே உறுதியாகிவிட்டது.அதிலும் ஜெர்மனி நாட்டில் வாரிசை விட துணிவு தான் முதல் நாள் அதிக வசூலாம். முதல் நாள் மட்டும் ரூ 8 லட்சம் வரை துணிவு வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
#Varisu has crossed $700K in USA 🇺🇸
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2023
#Thunivu crosses $750K in North America.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2023
#Thunivu will cross #Valimai in New Zealand 🇳🇿 today to become his Highest Grosser there..
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2023
#Thunivu has crossed ₹ 100 Crs at the WW Box Office..
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2023
இந்நிலையில் உலகளவில் இப்படம் மூன்று நாட்களிலேயே ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாக தகவல் வெளியானது.ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், 4 நாட்கள் முடிவில் தான் துணிவு ரூ. 100 கோடியை உலகளவில் கடந்து வசூல் செய்துள்ளது.
எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.