Saturday, February 24, 2024 10:03 pm

போடுறா வெடிய ரியல் ஆட்டநாயகனாக மாறிய அஜித் !! அதுவும் எங்கு தெரியுமா ? மொத்த ஏரியா வசூல் விபரம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘துனிவு’ திரைப்படம் வங்கி பின்னணியில் உருவாகி வங்கித் துறையில் நடக்கும் மோசடிகளைப் பற்றிய செய்தியை அனுப்புகிறது. அஜித்துடன் எச் வினோத்தின் மூன்றாவது படம் அவர்களின் முந்தைய வெளியீடை விட வெற்றிகரமான ஒன்றாகும், மேலும் முன்னணி நடிகர் ரசிகர்களை கவர எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அஜித்திற்காக ஜிப்ரானின் முதல் இசை நன்றாக வேலை செய்தது, அதே நேரத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் பொருத்தமாக இருக்கிறார்கள்.

அஜித் – ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. வியாழன் ரிலீஸ் என்ற சென்டிமெண்ட்டில் இருந்து விலகி புதன்கிழமையே வெளியானது துணிவு. ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் டார்க் டெவில் என்ற நெகட்டிவ் ரோலில் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார்.

மியூச்சல் பண்ட், கிரெடிக் கார்டு என வங்கிகளில் நடக்கும் மோசடிகளின் பின்னணி தான் இந்தப் படத்தின் ஒன்லைனாக உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை கொடுத்த அஜித் – ஹெச் வினோத் கூட்டணி, துணிவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால் முதல் நாளில் இருந்த அதே ஓப்பனிங், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் கிடைத்து வருகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 22 முதல் 25 கோடி வரை வசூலித்த துணிவு, உலகம் முழுவதும் 35 முதல் 40 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் துணிவு படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 12 முதல் 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், மூன்றாவது நாளில் தமிழ்நாட்டில் 9 முதல் 12 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 15 முதல் 18 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு மோதுவதால் வசூலில் பாதிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியில்லாமல் நான்காவது நாளிலும் துணிவு வசூல் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதன்படி 4வது நாளில் மொத்தம் 17 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. மேலும் இதுவரை துணிவு படத்தின் மொத்த வசூல் 90 முதல் 95 கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் பொங்கல் விடுமுறை என்பதால் இன்னும் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எச் வினோத் மற்றும் அஜித்தின் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகிய துணிவு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே 24 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் வெளியானது இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு இடையே பல போட்டிகள் ஏற்பட்டது இந்த நிலையில் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் அதிக வசூலை ஈட்டி வருகிறது.

பெரும்பாலும் அஜித்தின் படங்கள் என்றாலே தமிழை தாண்டி மற்றும் மாநிலங்களும் சரி மற்ற நாடுகளிலும் சரி பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் துணிவு திரைப்படம் அதையெல்லாம் ஒரே நொடியில் நொறுக்கியது. அதாவது துணிவு திரைப்படம் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள பிரபல செய்தித்தாளில் துணிவு படத்தை பல பக்கங்களில் பாராட்டி எழுதி உள்ளனர் இதனாலே வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் அதிக கலெக்ஷனை பெற்று வருகிறது துணிவு.

எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்