சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 6,796 சிறப்புப் பேருந்துகளில் 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பொங்கல் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து தினமும் 2,100 பேருந்துகளும், 2,010 சிறப்பு பேருந்துகளும் இன்று புறப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமம், இடையூறு இன்றி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.