Thursday, March 28, 2024 4:59 pm

இனி ஒரு உயிர் போகக்கூடாது அஜித் ரசிகர் மறைந்த விஷயத்தில் அஜித் எடுத்த அதிரடி முடிவு !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘துனிவு’ திரைப்படம் வங்கி பின்னணியில் உருவாகி வங்கித் துறையில் நடக்கும் மோசடிகளைப் பற்றிய செய்தியை அனுப்புகிறது. அஜித்துடன் எச் வினோத்தின் மூன்றாவது படம் அவர்களின் முந்தைய வெளியீடை விட வெற்றிகரமான ஒன்றாகும், மேலும் முன்னணி நடிகர் ரசிகர்களை கவர எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அஜித்திற்காக ஜிப்ரானின் முதல் இசை நன்றாக வேலை செய்தது, அதே நேரத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் பொருத்தமாக இருக்கிறார்கள்.

என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கங்களை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ணம் ஓட்டத்திற்கு உகந்ததில்லை. சமுதாயப் பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்,

நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதை சுட்டிக்காட்டி அஜித் தலைமையின் கீழ் கசெயல்பட்டு வந்த நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் என தெரிவித்து தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தார் அஜித்குமார். பல நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி வந்தவர்களுக்கு மத்தியில் ஒரு முன் உதாரணமாக அமைந்தது அஜித்தின் இந்த செய்லபாடுகள்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் துணிவு, மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் ஒரே தேதியில் வெளியாகி பல இடங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. மேலும் படத்தை காண்பதற்கு திரையரங்கில் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் பல திரையரங்குகள் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறியது.

அந்த வகையில் சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படத்தை முதல் ஷோ பார்க்க சென்ற ஒரு அஜித் ரசிகர், அங்கு நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியவாறு கீழே குதித்த போது அந்த 19 வயது இளைஞனுக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார், ஆனால் அஜித் துக்கம் விசாரிக்க வரவில்லை. அந்த ஏழை குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்கின்ற ஒரு விமர்சனம் எழுந்து வந்த நிலையில், இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். அஜித் ரசிகரின் மரணத்திற்கு துக்கம் விசாரிக்க சென்றாலோ, அல்லது வெளிப்படையாக உதவி செய்தாலோ, அது தன்னுடைய ரசிகரின் மரணத்தை ஊக்குவிப்பது போன்று அமைந்துவிடும்.


ஆகையால் விரைவில் சத்தமே இல்லாமல் பாதிப்படைந்த அந்த ரசிகரின் குடும்பத்திற்கு எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்களை நேரில் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து, மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பஞ்சு பேசி தன்னுடைய ரசிகர்களை தூண்டிவிட்டு ரசிகர்களை கேடயமாக பயன்படுத்தும் விஜய் போன்றவர்கள் அஜித்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கின்றது என்கின்ற கருத்தும் நிலை வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ‘துணிவு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி, விஜய்யின் ‘வரிசு’ படத்தை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்தது. போட்டி நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் மோதலால் ரசிகர்கள் பைத்தியம் பிடித்தனர், மேலும் இரண்டு படங்களும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. முதல் நாளிலேயே அமோக வரவேற்பைப் பெற்ற ‘துனிவு’ 2வது நாளில் திடமாக முன்னேறியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்