அதிரடி காட்சிகளால் நிரம்பிய, அஜித்தின் ‘துணிவு’ ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது, மேலும் பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தனது மூன்றாவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு சமூக செய்தியை அனுப்புகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் நாடகமான ‘மங்காத்தா’வில் அவரது பாத்திரத்தை ரசிகர்கள் ஒப்பிடுகையில், அஜித் ஒரு எதிர்மறையான கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன் சுந்தரம் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர், அதே நேரத்தில் ஜிப்ரானின் இசை படத்தை மேலும் ஈர்க்கிறது.
தற்போது இளம் இயக்குனர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு படங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் அவருடைய படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜுக்கு அடுத்தபடியாக வினோத் ரசிகர்கள் விரும்பும் இயக்குனராக உள்ளார்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படம் ரசிகர்களிடம் பாசிடிவ் கமெண்ட்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வசூலையும் வாரி குவித்து வருகிறது. தொடர்ந்து மூன்று முறை அஜித் உடன் கூட்டணி போட்ட வினோத் இப்போது மற்ற நடிகரின் படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் துணிவு ரிலீசுக்கு முன்பே யோகி பாபுவை வைத்து வினோத் ஒரு படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏனென்றால் தொடர்ந்து ஆக்சன் படங்களாக எடுத்து வரும் வினோத் மாறுதலுக்காக ஒரு காமெடி ஜானரில் படம் பண்ணலாம் என்று யோசித்து இருந்தார்.
ஆனால் இப்போது துணிவு வெற்றி அவரை வேற லெவலில் கொண்டு சேர்த்து உள்ளது. அதாவது வினோத் உலக நாயகன் கமல் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கதை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே துணிவு படம் ரிலீசுக்கு பின்பு படத்தை பார்த்து முடிவு செய்கிறோம் என்று கூறிவிட்டனர்.
இப்போது துணிவு படத்தை பார்த்துவிட்டு கமலும், தனுஷும் உடனடியாக வினோத்துக்கு போன் செய்து எப்போது படம் பண்ணலாம் என்று ஆர்வமாக கேட்டுள்ளனர். ஆகையால் இப்போது வினோத், யோகி பாபுவின் படத்தை சில காலம் தள்ளி போடலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.
மேலும் கமல் மற்றும் தனுஷ் இவர்களில் யார் முதலில் வந்து கால்ஷீட் தருகிறார்களோ அவர்களின் படத்தை முதலில் தொடங்கலாம் என்று வினோத் யோசித்துள்ளாராம். ஆகையால் விரைவில் வினோத் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி இந்த அறிவிப்புக்காக வினோத் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
#Thunivu lands in #France Top 5 on Day 1..#Thunivu 's Day 1 France official Entrees – 3,671 https://t.co/30uaX9U2a3
— Ramesh Bala (@rameshlaus) January 13, 2023
#Thunivu – Media reviews and public WOM from Day 1 are working in favor of the movie..
All age audience are flocking to see this wholesome entertainer in theaters.. pic.twitter.com/laSlppEVli
— Ramesh Bala (@rameshlaus) January 13, 2023
#Thunivu / #Tegimpu takes a ₹ 50 Cr+ WW Opening on Day 1..
Thanks to excellent performance in TN, Karnataka, USA 🇺🇸, UAE 🇦🇪, Sri Lanka 🇱🇰 , Singapore 🇸🇬 and Malaysia 🇲🇾
All Big Tamil Markets..
A small help from Telugu states..
— Ramesh Bala (@rameshlaus) January 12, 2023
Karnataka Box office on January 12th –#VeerasimhaReddy > #Thunivu > #Varisu
— Karnataka Talkies (@KA_Talkies) January 13, 2023
#Thunivu Worldwide Day1 Highest Collection 🔥🔥🔥#AjithKumar @rameshlaus #Pongal2023WinnerTHUNIVU
pic.twitter.com/AfCIatkwqm— AK Brothers 🤗 (@Ajithiyan_4) January 12, 2023
இலங்கையில் வெளியாகி உள்ள படங்களில் அதிக வசூல் செய்து உள்ள ஒரே தமிழ் திரைப்படம் அது துணிவு திரைப்படம் தான் .இலங்கையில் மட்டுமே இந்திய காசு படி 8.1/5 கோடி க்கு மேலே வசூல் செய்து புதிய சாதனையை செய்து உள்ளது இதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .