Friday, April 26, 2024 3:16 am

தாறுமாறாக தயாராகும் ஏகே 62 திரைப்படம் !! அதிரடியாக Ak 62 படத்தில் இணைந்த கைதி பட நடிகர் !!லேட்டஸ்ட் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஏகே 62 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு லைகா புரொடக்ஷன்ஸ் ஆதரவு அளித்துள்ளது. இப்படத்தில் அஜித் டான் வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் மும்பையில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் அஜித் நடிப்பில் தற்பொழுது துணிவு திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 11ஆம் தேதி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியார் நடித்துள்ளர்.

இதனை அடுத்து பிக்பாஸ் பிரபலம் அமீர், பாவனி, சிபி ஆகியோர்களும் நடித்துள்ள நிலையில் மேலும் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். பேங்க் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 30ஆம் தேதி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனை அடுத்து நடிகர் அஜித் 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 11ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது மேலும் இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் விசுவாசம் திரைப்படத்தில் நடித்த நயன்தாரா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து பிரபல நடிகையான திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் நயன்தாரா நடிக்க மறுத்துள்ளார் அதேபோல் த்ரிஷாவும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்பொழுது அஜித் 62வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக விவேகம் திரைப்படத்தின் நடித்த காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது நடிகை காஜல் அகர்வால் கமலுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு காஜல் அகர்வால் விவேகம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை அடுத்து அஜித் 62வது திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான 62 படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார் என்பது தற்போது வைரலாகி வருகிறது

ஏகே 62 படத்துக்கு விக்னேஷ் சிவன் படங்களில் தொடர்ந்து இசையமைக்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு அஜித்துடன் இசையமைப்பாளர் நடிக்கும் மூன்றாவது படம் இது.

இதற்கிடையில், அஜித்தின் துனிவு படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. எச் வினோத் இயக்கிய, இது பேங்க்-ஹீஸ்ட் த்ரில்லர், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் ஜான் கோக்கன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்