28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஇந்த பொங்கல் துணிவுக்கு தான் !! இந்திய அளவில் ட்ரோலாகும் விஜய்ண்ணா...

இந்த பொங்கல் துணிவுக்கு தான் !! இந்திய அளவில் ட்ரோலாகும் விஜய்ண்ணா கிரிஞ்ச் டயலாக்!

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

விஜய்யின் வரவிருக்கும் படம் ‘வரிசு’ ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெற்றிகரமான ஆடியோ வெளியீட்டிற்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் தற்போது வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.இப்படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், குஷ்பு, மீனா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்பதை இரண்டரை நிமிட டிரைலர் உறுதிப்படுத்துகிறது. சரத் குமாரின் இளைய மகனாக விஜய் நடிக்கிறார், அவர் ஒரு பெரிய பிஸ்னிஸ் மனிதராக இருக்கிறார், மேலும் விஜய் சில காரணங்களால் குடும்ப வியாபாரத்தை எடுத்துக்கொள்கிறார் மற்றும் பிரகாஷ்ராஜை எதிர்கொள்கிறார்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த “வாரிசு” படத்தின் டிரைலர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் குஷ்பு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, சங்கீதா, ஷாம் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.

“வாரிசு” திரைப்படத்தின் டிரைலரை வைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் தந்தை சரத்குமாருக்கு பிறகு அவருடைய மூன்றாவது மகனான விஜய் அவரின் தொழிலுக்கு வாரிசாக வருகிறார். தொழிலில் பல போட்டிகள் எழ, எதிரிகளால் பல சதிகள் நடக்கிறது. அந்த சதியால் விஜய்யின் குடும்பம் பிரிய நேர்கிறது. இதனை தொடர்ந்து விஜய் தனது தொழிலுக்கு பங்கம் விளைவிக்கும் எதிரிகளை அழித்தாரா? தனது குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? என்பதுதான் கதையாக இருக்கும் என வியூகிக்க முடிகிறது.

டிரைலரில் விஜய் மிகவும் இளமையாக இருக்கிறார். “விஜய்க்கு வயசே ஆகாதாப்பா” என அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரை மெச்சிப்பேசுவது உண்டு. எனினும் அது உண்மையே என்பது போல் இன்னமும் காலேஜ் ஸ்டூடண்ட் போலவே வலம் வருகிறார் விஜய். டிரைலரில் சில ஆக்சன் காட்சிகள் காட்டப்படுகிறது. அதிலும் தனது அசரவைக்கும் கரிஷ்மா மூலம் ஸ்கோர் செய்கிறார் விஜய்.

ஆனால் இது தவிர, டிரைலர் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகத்தான் தெரிகிறது. டிரைலரை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தெலுங்கு வாடை சற்று அதிகமாக அடிக்கிறது. “வாரிசு” திரைப்படத்தின் இயக்குனர் தெலுங்கு இயக்குனர்தான். மேலும் இத்திரைப்படம் “வாரசுடு” என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது என்பதை ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் டிரைலர் ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தின் டிரைலர் போல் தெரியவே இல்லை.

கதையை பொறுத்தவரை மிகவும் வழக்கமான ஒரு கதைப்போலத்தான் தெரிகிறது. பிரகாஷ் ராஜ் வில்லனாக வருகிறார். அவரின் வில்லத்தனமான மாடுலேசன் நன்றாக இருக்கிறது. ஆனால் வசனங்கள் அந்த அளவுக்கு டெரிஃபிக்காக இல்லை. பிரகாஷ் ராஜ் வசனங்கள் மட்டுமல்லாது, விஜய் பேசும் பஞ்சு வசனங்கள் கூட ஜீவன் இல்லாமல் இருக்கிறது என்பதுதான் சோகம்.

“துணிவு” திரைப்படத்தின் டிரைலர் மிகவும் அட்டகாசமாக இருந்ததால், விஜய் ரசிகர்கள் “வாரிசு” திரைப்படத்தன் டிரைலருக்காக வெறிக்கொண்டு காத்திருந்தனர். ஆனால் “வாரிசு” படக்குழுவினரோ ரசிகர்களின் வாயில் பழைய சோத்தை திணித்துவிட்டு போயிருக்கிறார்கள். இனி பொங்கல் தினத்திலாவது பொங்கல் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொதுவாக தமிழில் சமுத்திரம், ஆனந்தம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற குடும்ப திரைப்படங்கள் தான் வருவதுண்டு. கிராமத்து மண் வாசனையுடன் கூடிய குடும்ப படங்களை தான் கோலிவுட் ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர். ஆனால், வாரிசு ட்ரெய்லர் அப்படியில்லாமல் நேட்டிவிட்டிக்கு அந்நியமாக இருக்கிறது என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஹைடெக்கான குடும்ப கதைகள் இதுவரை தமிழில் பெரிய அளவில் எடுக்கப்பட்டதும் இல்லை, வந்த ஒன்றிரண்டு படங்களும் ஹிட்டானது கிடையாது என கூறி வருகின்றனர்.

அதேபோல் வாரிசு படத்தின் காமெடி காட்சிகளும் நெட்டிசனளால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. கிரிஞ்ச் ரசனையுடன் கூடிய காமெடி வசனங்கள் தமிழ் ஆடியன்சுக்கு கனெக்ட் ஆகுமா என்பதே பெரிய சந்தேகமாக காணப்படுகிறது. காமெடி என நினைத்து பூவை கம் போட்டு ஒட்ட வைக்கலாம்னு கிரிஞ்ச் டயலாக் பேசியுள்ளார் விஜய். பூவே உனக்காக படத்தில் வரும் சீரியசான வசனத்தை இப்படியா காமெடி என்ற பெயரில் மொக்கை செய்வது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ட்ரெய்லரின் இறுதியில் வரும் குடும்பத்தை பற்றிய வசனமும் பயங்கராமாக ட்ரோல் செய்யப்படுகிறது.


வம்ஷி பைடிபள்ளி இயக்கிய ‘வரிசு’ படத்தில் விஜய் மற்றும் ரஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஷாம், எஸ்.ஜே.சூர்யா, குஷ்பு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ‘வரிசு’ தெலுங்கிலும் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது, மேலும் சில மணிநேரங்களுக்குப் பிறகு தெலுங்கு டிரெய்லர் தமிழ் டிரெய்லருக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய கதைகள்