சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் இரு ஆண் குழந்தைகளை பெற்று வளர்த்து வந்த ஐஸ்வர்யா, கடந்த ஆண்டு தனுஷை பிரிவதாக அறிவித்தார்.
18 வருட திருமண வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
விவாகரத்து அறிவிக்காமல் தனுஷை விட்டு பிரிந்தது முதல் சுதந்திர பறவையாக இயக்கம், ஜிம் ஒர்க், சைக்கிளிங் என்று தினமும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
கடந்த புத்தாண்டு அன்று ஃபுல் மாடர்ன் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.