Thursday, March 28, 2024 8:41 pm

துணிவு படத்தின் செகண்ட் ஆப் வேறலெவல் !! CLIMAX தாறுமாறு!! அஜித் கண்ணாடி தான் டுவிஸ்ட் !லேட்டஸ்ட் அப்டேட் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது என்பது தெரிந்ததே. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. யு/ஏ சான்றிதழுடன் சென்சார் போர்டு.

படத்தின் டிரெய்லர் புத்தாண்டுக்கு முன்னதாக டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்டது, மேலும் படம் வங்கி திருட்டைப் பற்றியது என்பதை உறுதிப்படுத்தியது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், பிரேம், பக்ஸ், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரானின் பின்னணி ஸ்கோர் தீயை ஏற்றி வைக்கிறது, அதே சமயம் காட்சிகளும் கம்பீரமாகத் தெரிகிறது. ‘

இந்நிலையில், துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதில் துணிவு படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு கொடுத்துள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இப்படத்தில் வரும் வடக்கன்ஸ் என்கிற வார்த்தைக்கு பீப் போட்டதாகவும், காசேதான் கடவுளடா பாடலில் வரும் காந்தி என்கிற வார்த்தைக்கு பீப் போடப்பட்டதாகவும், ஒரு சில காட்சிகளில் வந்த கெட்ட வார்த்தை என மொத்தம் 17 இடங்களில் மியூட் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், இரண்டு படங்களுக்கும் சரி சமமாக தியேட்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கதாபாத்திரங்களின் பெயர்களை அறிவித்த படக்குழு ட்ரெய்லரில் ஆவது அஜித்தின் கதாபாத்திர பெயரை அறிவிப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் அதை ரிவீல் செய்யவில்லை. இந்நிலையில், படத்தில் கூட கிளைமேக்ஸ் வரை அஜித்தின் பெயர் ரிவீல் செய்யப்படாது என்றும் கிளைமேக்ஸில் தான் செம ட்விஸ்ட்டாக அவரது பெயர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதல் காட்சியிலேயே குழந்தையை தலை கீழாக தொங்கவிடுவது மற்றும் படம் முழுக்க ஆபாச வசனங்களை பேசுவது என துணிவு படத்திலும் அஜித் மங்காத்தா பாணியை பின் பற்றியுள்ள விவரங்கள் சென்சார் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ள நிலையில், கிளைமேக்ஸில் விநாயக் மகாதேவ் என அஜித்தின் பெயர் அறிவிக்கப்படுமா? என்கிற கேள்வியும் வலம் வருகிறது.

துணிவு படத்தில் அஜித் வில்லனாக நடித்து உள்ள நிலையில், வங்கி கொள்ளையில் ஈடுபடுவதற்கு காரணமே ஃபிளாஷ்பேக்கில் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய காசு இல்லாமல் அவர் இறந்து போய்விட்டார். அதனால், கடுப்பான அஜித்தின் Revenge தான் என்றும் கிளைமாக்ஸ் வில்லனுக்கு தனது பாணியில் சொல்லி அடித்து ஒரு மாஸான ட்விஸ்ட் உடன் துணிவு படம் முடியும் என தகவல் கிடைத்துள்ளது

இந்த நிலையில் படம் பார்க்கும்போதும் கூட ரசிகர்களுக்கு அவரது கேரக்டர் என்ன என்று யாருக்கும் தெரியாது என்றும் கிளைமாக்ஸில் தான் அஜித்தின் உண்மையான பெயர் தெரியவரும் என்றும் அப்போது ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது என்ன ட்விஸ்ட் என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வோம்.

அது மட்டும் இல்லாமல் அஜித்தின் போட்டுள்ள கண்ணாடி பின் ஒரு ஃபிளாஷ்பேக் அந்த சீன எல்லாம் சூப்பராக வந்துள்ளதும் என்றும் தகவல் கிடைத்துள்ளது

‘துணிவு’ வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் படம். அஜீத் ஒரு கெட்டப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர் மற்றும் அஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் மூன்றாவது திரைப்படம் ‘துணிவு’. 8 வருடங்களுக்குப் பிறகு விஜய்யும், அஜித்தும் முறையே ‘வரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். இந்த பண்டிகை காலம் கோலிவுட்டில் உள்ள இரு நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்