Wednesday, April 17, 2024 2:57 am

வாய் நாத்தத்தை போக்க இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணிகளாகும் இதுபோன்ற பிரச்சினை வரக்காரணம் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

அதில் குறிப்பாக சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

எதனால் ஏற்படுகின்றது?
வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும்.

உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது.

உடல் பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது.

வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம்.

புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் இன்பெக்க்ஷன் ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

அந்தவகையில் வாய் தூர்நாற்றத்தை போக்க என்ன மாதிரியான இயற்கை வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.

சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் நீண்ட நேரம் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சிறிது கொத்தமல்லியை உணவு உண்ட பின்னர் வாயில் போட்டு மெல்லுங்கள். குறிப்பாக பூண்டு நிறைந்த உணவுகளை உண்ட பின்னர் கொத்தமல்லி சாப்பிட்டால், வாயில் இருந்து வீசும் பூண்டின் நாற்றம் நீங்கும்.

முன் ஒரு கொய்யா இலையை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் நீண்ட நேரம் வாய் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

கிரான்பெர்ரி வாய் துர்நாற்றத்தைப் போக்கும், ஈறுகளை வலிமையாக்கு, பல் சொத்தையைத் தடுக்கும். இது தவிர பற்களை வெண்மையாக்க உதவும். எனவே இந்த பழம் எங்காவது கிடைத்தால், அதை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

எப்போதெல்லாம் வாய் துர்நாற்றம் வீசுவதை உணர்கிறீர்களோ, அப்போது ஒரு கிராம்பை வாயில் போட்டு மெல்லுங்கள்.

வாய் துர்நாற்றம் வீசினால் ஒரு ஸ்பூன் சோம்பை ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் சோம்பை சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் தடுக்கப்படுவதோடு, செரிமானமும் சிறப்பாக நடக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்