Thursday, March 28, 2024 2:09 pm

விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா” கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் இந்த பிரபலமா…வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிகப்பெரிய வசூலை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்த திரைப்படம் என்றால் அது விக்ரம் படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட் கலந்து திரைப்படமாக இருந்தது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விக்ரம் படம் வெளிவந்து அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது மேலும் தமிழை தாண்டி பல்வேறு இடங்களிலும்..

நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக விக்ரம் திரைப்படம் 450 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. இந்த படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது வேறு ஒரு சீரியல் நடிகை தான் என கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் முக்கிய மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை தேவிப்பிரியா. மேலும் இவர் பல்வேறு படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியதாம் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் சொன்னது என்னவென்றால்..

விக்ரம் படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன்.. அப்பொழுது டீனா ரிப்போர்ட்டிங் சார் என்னும் வசனத்தை பேசும்போது என்னுடைய குரல் வளம் சரியாக இல்லாத காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது இதனால் மிகுந்த வேதனை அடைந்தேன் என கூறினார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்