Thursday, March 28, 2024 7:38 pm

தமிழ்நாட்டுல NO 1 யார்னு நாங்க சொல்லனும் ,அவருக்கு என்ன தெரியும்? பதிலடி கொடுத்த திருப்பூர் சுப்ரமணியம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித்குமார் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் சவாரி செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அவரது உலகச் சுற்றுப்பயணம் நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது மற்றும் பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட நட்சத்திர நடிகர் தனது உலகச் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தை முடித்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த மாத தொடக்கத்தில், ‘துனிவு’ நடிகர் தனது பைக் பயணத்தைத் தொடங்க ஹைதராபாத் சென்றார்.

“ஹைதராபாத்தில் உட்கார்ந்துகொண்டு விஜய் நம்பர் 1 நடிகர் என்று தில் ராஜு பேசுவதில் நியாமில்லை. யார் பெரிய ஸ்டார் என்பது எங்களுக்குத் தெரியாதா? உதயநிதி ஸ்டாலின் இன்னும் ‘துணிவு’ படத்திற்கு…” – திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி

“தமிழ்நாட்டில் நம்பர் 1 ஸ்டார் விஜய் என்பதால், ‘வாரிசு’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்கவேண்டும். இதுதொடர்பாக, ‘துணிவு’ படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதியை சந்திக்கவுள்ளேன்” என்று ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருப்பது அஜித் ரசிகர்களிடமும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை பற்றவைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்,”தயாரிப்பாளர் தில் ராஜு ஹைதராபாத்தில் அமர்ந்துகொண்டு என்ன அர்த்தத்தில் இப்படி பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. ரெட் ஜெயன்ட் நிறுவனம் ‘துணிவு’ படத்தை வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் இன்னும் ஒரேயொரு தியேட்டரைக்கூட கன்ஃபார்ம் செய்யவில்லை. ஒரு யூகத்தில்தான், தில் ராஜு இப்படி பேசுகிறார். எந்த எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை ரெட் ஜெயன்ட் தியேட்டர்களை கன்ஃபார்ம் செய்திருந்து, தியேட்டர்களை பிளாக் செய்து வைத்திருந்தால், அவர் இப்படி பேசுவதில் நியாயம் இருக்கிறது. தியேட்டர் ஓனர்களைப் பொறுத்தவரை விஜய், அஜித்துக்கு எந்தவிதமான வித்தியாசத்தையும் பார்க்கமாட்டார்கள்.

இருவருமே சமமாக நடிக்கக்கூடிய முன்னணி நடிகர்கள். எங்களுக்குத் ‘துணிவு’தான் வேண்டும், ‘வாரிசு’தான் வேண்டும் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. ரெட் ஜெயன்ட் புக்கிங் கொடுத்தால்தான், தங்களுக்கு எந்தப் படம் வேண்டும் என்பதை தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்வார்கள். அதற்குள்ளாகவே, எங்களுக்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று கேட்டால், உடனே கொடுத்துவிடுவார்களா? அதேமாதிரி, விஜய்தான் நம்பர் 1 ஸ்டார் என்றும் தில்ராஜு கூறியுள்ளார். சினிமாவில் நம்பர் 1 ஸ்டார் கதைதான். படம் நன்றாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக, அஜித், விஜய், கமல்ஹாசன் படங்கள் வந்தன. இவற்றுடன் ஒப்பிடும்போது, ‘பொன்னியின் செல்வன்’ வசூலை வாரிக்குவித்தது. அப்போ, மிக முக்கியமானது கதைதானே? கமல் நான்கு வருடங்களாக படமே நடிக்கவில்லை. ‘விக்ரம்’ வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்போ, விஜய், அஜித்தை விட கமல்தான் நம்பர் ஒன் நடிகர் என்று சொல்ல முடியுமா?

சினிமாவில் எந்தப் படம் நன்றாக உள்ளதோ, அதுதான் சூப்பர் ஹீரோ. பொதுமக்கள் நடிகர்களின் முகத்திற்காக தியேட்டருக்குச் செல்வது கிடையாது. படம் நல்லாருந்தால்தான் தியேட்டருக்கு வருவார்கள். அப்படி, பார்த்தால் ‘பீஸ்ட்’ படமே தோல்விதான். தில் ராஜு ஆந்திராவில் உட்கார்ந்துகொண்டு, ‘எனக்குதான் அதிக தியேட்டர் கொடுக்கணும். விஜய்தான் நம்பர் 1 ஹீரோ’ என்கிறார். யார் பெரிய ஸ்டார் என்பது எங்களுக்குத் தெரியாதா? எந்தக் கதை நல்லாருக்கோ அதுதான் பெரிய ஸ்டார்.

‘கதை சூப்பரா இருக்கு’ன்னு சொல்லி சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்தான் தயாரித்தார். ஆனால், இங்கு தியேட்டரில் ஆளையே காணோம். அதற்காக, சிவகார்த்திகேயன் சுமார் ஸ்டார் என்று சொல்ல முடியுமா?. ‘பிரின்ஸ்’ படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ படமும் ரிலீஸானது. ஆரம்பத்தில், நிறைய தியேட்டர் ஓனர்கள் ‘பிரின்ஸ்தான் வேண்டும்’ என்று கேட்டு திரையிட்டார்கள். ஆனால், அடுத்த நாளே ஃபோன் செய்து சின்ன தியேட்டரிலிருந்து ‘சர்தார்’ படத்தைப் பெரிய தியேட்டருக்கு மாற்றிக்கொள்கிறோம் என்றார்கள். இது யாரும் கணிக்க முடியாத தொழில்.

இதில், எங்க ஆளுதான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று அதுவும் படத்தைத் தயாரிப்பவரே சொல்வது எந்த விதத்திலும் நியாயமே இல்லை. விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டார் என்பதற்காக தேவையில்லாமல் பேசி பிரச்சனையை உருவாக்குகிறார். இந்த கமெண்ட் எல்லாம் தேவையில்லாதது. அதாவது, உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வேறு; சினிமா வேறு. எந்தக் குழப்பமும் டென்ஷனும் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். தில் ராஜு தேவையில்லாமல் வம்புக்கிழுக்கிறார் என்பதுதான் உண்மை” என்று ஆவேசத்துடன் மறுத்துப் பேசுகிறார்.

இதற்கிடையில், அஜித் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்தின் ‘துனிவு’ படத்தில் நடிக்கிறார், இது பொங்கலுக்கு ஜனவரி 12, 2022 அன்று திரைக்கு வர உள்ளது. அவர் விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படப்பிடிப்பைத் தொடங்குவார், இது தற்காலிகமாக ‘ஏகே 62’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அஜீத் தனது உலகப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கவுள்ளார். அஜித் ஓராண்டுக்கும் மேலாக படங்களில் இருந்து ஓய்வு எடுப்பார் என்றும், 62 நாடுகளுக்கு 18 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்