Friday, June 2, 2023 3:34 am

2022-ல் வசூலில் சாதனை படைத்த 10 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

கொரோனா பிரச்சனை கடந்த ஆண்டு எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து ஓடிடி வழியாக வெளியானது இப்படிப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த வருடம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக வெளிவந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் நடிகர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் பிரபலம் அடைந்த 10 இந்திய படங்கள் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. வருடம் தோறும் அந்த ஆண்டின் முடிவில் எந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ளது என்பது பற்றிய பட்டியல் வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டு அதிகம் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. அதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் இடத்தில் பிடித்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து தி காஷ்மீர் ஃப்ல்ஸ் இரண்டாவது இடத்தினையும், கேஜிஎஃப் 2 திரைப்படம் மூன்றாவது இடத்திலையும் பெற்றுள்ளது.

மேலும் இதனைத் தொடர்ந்து தமிழில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் நான்காவது இடத்தையும், காந்தாரா ஐந்தாவது இடத்தினையும் பிடித்துள்ளது. பிறகு ராக்கெட்ரி ஆறாம் இடத்திலும், மேஜர் ஏழாவது இடத்திலும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து சீதாராமன் எட்டாவது இடத்திலையும், பொன்னியின் செல்வன் ஒன்பதாவது இடத்தினையும் மற்றும் சார்லி பத்தாவது இடத்திலையும் பெற்றுள்ளது இவ்வாறு இந்த பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்