Saturday, April 20, 2024 12:30 am

அஜித் அனுப்பிய வீடியோ.. தல சொன்னதை தட்டாமல் செய்த கல்யாண் மாஸ்டர் லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

துணிவு 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. எச் வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார் இதனை தொடர்ந்து இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது மேலும் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா என தொடங்கும் பாடலை பட குழு நேற்று வெளியிட்டிருந்தது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாடலை வைசாக் அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு திரைப்படத்தில் மூன்று பாடல்களை வயசாக் எழுதி உள்ளதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள சில்லா சில்லா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் இன்னும் மரண மாஸ் ஆக இருக்கும் என தற்போது சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடலுக்கு கொரியோகிராப் செய்த கல்யாண் மாஸ்டர் அந்த ரகசியத்தை கூறியுள்ளார் அதாவது சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் மரண குத்து இருக்கும் என்று கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான் என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள இன்னொரு பாடலை கல்யாண் மாஸ்டர் தான் கொரியாகிராப் செய்கிறார் என்று தெரிகிறது. விரைவில் அந்த பாடலையும் பட குழு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. சில்லா சில்லா பாடலின் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு தகவலை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் மூன்றாவது பாடலை ப்ரோமோஷன் பாடல் என்பதும் கேங்ஸ்டர் என்று தொடங்கும் இந்த பாடல் படம் ரிலீஸ் இருக்கும் முன்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்த மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை வைசாக் எழுதி, அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். லிரிகல் வீடியோவில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இந்த பெப்பி நம்பரைப் பற்றி பேசுகிறார்கள். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி ஷங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்