Monday, April 15, 2024 8:22 am

துணிவு பயத்தால் மீண்டும் பிரியாணி விருந்து வைத்த விஜய் !! கூறியது யார் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

துணிவு 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. எச் வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோத காத்திருக்கின்றன.ஒரு பக்கம் இருவரும் புதிய போட்டோக்களையும், பெரிய பேனர்களையும் படக்குழுவினரை வைத்து பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் பனையூரில் பிரியாணி போட்ட விஜய் மீண்டும் இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை பிரியாணி விருந்துடன் சந்திக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியானதும் அதனை ட்ரோல் செய்துள்ளார்

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களும் தனித்தனியாக வெளியானால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கோலிவுட்டுக்கும் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என நம்ப பட்டாலும், இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் தான் யாரு இப்போ பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது உறுதியாகும் என இந்த போட்டியை இருவருமே எதிர்நோக்கி காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேரடியாகவும் மறைமுகமாவும் இரு தரப்பினரும் தங்கள் பட ப்ரமோஷனை தீயாக செய்து வருகின்றனர். பேனர் வைப்பதில் இருந்து விளம்பரம் செய்ய என்ன என்ன வழிகள் உள்ளனோ அனைத்தையும் அதிரடியாக செய்து ரசிகர்களை எப்போதுமே ஆக்டிவாக வைத்திருக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், விஜய் நேரடியாகவே தனது ப்ரமோஷனை இறங்கி செய்து வருகிறார். பீஸ்ட் படம் படுத்து விட்ட நிலையில், வாரிசு வெற்றி பெற வேண்டும் என தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்தா போட்டு உற்சாகப்படுத்தி வருகிறார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் பனையூரில் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து அளித்து அனைவரையும் நேரில் சந்தித்து முதலில் உங்கள் பெற்றோர்களையும் குடும்பத்தையும் பாருங்க நண்பா என வயிறார உணவு போட்டு அட்வைஸ் செய்து விட்டு அனுப்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் பனையூரில் அடுப்பை பற்ற வைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

“மீண்டும் பிரியாணி.. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்?” என அந்த செய்தியை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டை அதிகம் ஷேர் செய்து விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.


மீண்டும் பனையூரில் விஜய் பிரியாணி கொடுப்பதே அஜித்தின் துணிவு படத்துக்கு பயந்து தான் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ள நிலையில், மெட்ரோ ரயில், பனையூர் பிரியாணின்னு விஜய் இப்படி வெறித்தனமா ப்ரமோஷன் பண்றாரே.. அந்த பயம் இருக்கணும் டா என அஜித் ரசிகர்கள் சண்டையை ஸ்டார்ட் செய்து விட்டனர்.

நடிகர் விஜய் எப்போதுமே வருஷத்துக்கு மூன்று முறை தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி போட்டு உற்சாகப்படுத்துவது வழக்கம். முந்தைய மீட்டிங்கில் இடம்பெறாத 3 மாவட்ட நிர்வாகிகளை இன்று அவர் சந்திக்க உள்ளார். இதற்கும் வாரிசு பட ப்ரமோஷனுக்கும் சம்மந்தம் இல்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

துனிவு ஒரு பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் அஜித் ஒரு சாம்பல் நிற கேரக்டரில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு, சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட் நடனம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்