Sunday, June 4, 2023 2:44 am

செம யங் லுக்கில் அஜித்! பழசா இருந்தாலும் செம்ம மாஸா இருக்ககே வைரலாகும் அஜித்தின் போட்டோ ஷூட்

spot_img

தொடர்புடைய கதைகள்

சிம்பு பாடிய டக்கர் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

சிலம்பரசன் டிஆர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா ஆகியோர் சித்தார்த் நடித்த டக்கர்...

நிகில் சித்தார்த்தா நடித்த சுயம்பு படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இதோ !

நிகில் சித்தார்த்தா தனது 20வது படத்தின் தலைப்பை இறுதியாக வெளியிட்டுள்ளார். ஸ்வயம்பு...

சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! செவி சாய்ப்பரா அஜித்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...
- Advertisement -

அஜித் நடித்த துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லாவை தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். மேலும் இது யூடியூப்பில் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் இணையத்தை ஆளுகிறது. அடுத்த பாடல் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வரவிருக்கும் பாடலின் தலைப்பை போட்டு ட்வீட் செய்தார்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அவருடன் கைகோர்த்து சமுத்திரக்கனி, யோகி பாபு,, மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்யும் என அஜித் ரசிகர்கள் இப்பொழுதே சொல்லி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் ஏ ஆர் முருகதாசுடன் கைகோர்த்து 2001 ஆம் ஆண்டு தீனா திரை படத்தில் நடித்தார். படம் அப்பொழுது வெளியாகி பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது அதன் பிறகு அஜித் – ஏ ஆர் முருகதாஸ் ஜோடி மிரட்டல் என்ற தலைப்பில் கை கோர்த்தது..

அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசினை நடிக்க வைக்க முடிவு செய்து போட்டோ சூட் எல்லாம் நடத்தியது. ஆனால் சில காரணங்களால் அப்பொழுது அஜித் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது பிறகு கஜினி என்ற தலைப்பில் சூர்யா அசினை வைத்து ஏ ஆர் முருகதாஸ் படத்தை எடுத்து வெற்றி கண்டார்.

இப்படி இருக்கின்ற நிலையில் மிரட்டல் என்ற தலைப்பில் முதலில் அஜித், அசினும் நடிக்க போட்டோ சூட் நடத்திய அந்த பழைய புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகாரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

துனிவு 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. எச் வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்