Sunday, April 14, 2024 6:24 pm

கோலிவுட்டில் பற்றி எரியும் துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் ரீலிஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திருட்டு த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படம் பஞ்சாப் வங்கி கொள்ளையின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 1970கள். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், ட்ரைலரை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா என தொடங்கும் பாடலை பட குழு நேற்று வெளியிட்டிருந்தது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாடலை வைசாக் அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு திரைப்படத்தில் மூன்று பாடல்களை வயசாக் எழுதி உள்ளதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள சில்லா சில்லா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் இன்னும் மரண மாஸ் ஆக இருக்கும் என தற்போது சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடலுக்கு கொரியோகிராப் செய்த கல்யாண் மாஸ்டர் அந்த ரகசியத்தை கூறியுள்ளார் அதாவது சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் மரண குத்து இருக்கும் என்று கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான் என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள இன்னொரு பாடலை கல்யாண் மாஸ்டர் தான் கொரியாகிராப் செய்கிறார் என்று தெரிகிறது. விரைவில் அந்த பாடலையும் பட குழு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. சில்லா சில்லா பாடலின் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு தகவலை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் 15 அல்லது 16 ஆம் தேதி அன்று வெளியாகலாம் என்று தகவல் கிடைத்துள்ளது .அதுமட்டும் இல்லாமல் மூன்றாவது பாடலின் போஸ்டர் ரெடி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது

படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு, படத்தின் முதல் சிங்கிள் ‘சில்லா சில்லா’ வெளியாகி 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, விரைவில் படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்