26 C
Chennai
Sunday, February 5, 2023
Homeசினிமாவைகை புயல் வடிவேலு நடித்த நாய் சேகர் ரீட்டன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ !!

வைகை புயல் வடிவேலு நடித்த நாய் சேகர் ரீட்டன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’...

கடந்த ஆண்டு வெளியான ‘மாமனிதன்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக...

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி...

2023 தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிஸியான ஆண்டாகத் தெரிகிறது, ஏனெனில் பெரிய...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் முதல் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட்...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும்...

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏகே 62 படத்தில்...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள...

லோகேஷ் இயக்கிய விக்ரம் படமே மகிழ் திருமேனி படத்தின்...

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக 'தளபதி 67'...

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தமிழ்த் திரைப்படம் 9 டிசம்பர் 2022 அன்று வெளியானது. இந்த திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார் மற்றும் வடிவேலு, ஆனந்தராஜ், முனிஷ்காந்த் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாய் சேகர் ரிட்டர்ன்ஸிற்காக இணைக்கப்பட்ட மற்ற பிரபல நடிகர்கள் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் மனோபாலா.

5 வருடங்களுக்கும் மேலாக படங்களில் இருந்து விலகியிருந்த வடிவேலு, இறுதியாக சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் வருகிறார், மேலும் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. டிரெய்லரில் இருந்து, வடிவேலு ஒரு நாய் கடத்தல்காரனாகக் காணப்படுவார் போல் தெரிகிறது, மேலும் கிட்டத்தட்ட 2 நிமிட வீடியோ ஒரு பொழுதுபோக்கு படம் என்று உறுதியளிக்கிறது. ஆனந்தராஜ், ராவ் ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, முனிஷ்காந்த், பிரசாந்த் ரங்கசாமி மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வடிவேலு தனது சிறந்த நகைச்சுவை உரையாடல்களில் இருந்து சிறந்ததை வழங்கியுள்ளார்.

வருடக்கணக்கில் குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதி ஒன்று குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு செல்கின்றனர். அந்த சமயம் அங்கு ஒரு சித்தர் வர, அவரின் வயிற்றுப்பசியை அந்த தம்பதி ஆற்றுகிறது. இதனால் மனம் குளிர்ந்து போன அந்த சித்தர், அந்த தம்பதிக்கு நாய் ஒன்றை கொடுக்கிறார். அந்த நாய் வந்த நேரம், அவர்களுக்கு ஒரு பக்கம் குழந்தையாக நாய்சேகர் (வடிவேலு) பிறக்க, இன்னொரு பக்கம் செல்வம், புகழ் எல்லாம் வந்து கொட்டுகிறது.

இதனிடையே அந்த வீட்டில் வேலைக்காரனாக சேரும் ராவ் ரமேஷ் அந்த நாயை பற்றி தெரிந்து கொண்டு, அதனை திருடிக்கொண்டு சென்று விடுகிறார். அதனால் அவர் கோடிஸ்வரனாகி விட, நாய்சேகரின் குடும்பம் வறுமையின் அதளபாதளத்திற்கு சென்று விடுகிறது. இதனைத்தொடர்ந்து, அந்த நாயை மீண்டும் கைப்பற்ற நாய்சேகர் தனது குழுவை அழைத்துக்கொண்டு செல்கிறார். இறுதியில் அந்த நாயை அவர் மீட்டாரா? இல்லையா என்பதே மீதிக்கதை.

வடிவேலு கடந்த 5 வருடங்களாக திரையில் தோன்றவில்லை என்றாலும், அவரது மீம்களும், அவர் பேசிய வசனங்களும் சமூகவலைதளங்களில் அவரது இருப்பை நியாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவரது இழந்த மார்க்கெட்டை, தயாரிப்பாளர்கள் மத்தியில் தூக்கி நிறுத்தியது அவை என்றே சொல்லலாம். இந்த நிலையில்தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் மூலமாக அவர் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருந்தது. இதுமட்டுமல்லாமல் பங்கேற்ற நேர்காணல்களிலும் படம் அப்படி இருக்கும், இப்படி இருக்குமென எதிர்பார்ப்பை கிளப்ப, உச்சக்கட்ட எதிர்பார்ப்போடே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர்.

ஆனால் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்றால், பூர்த்தி செய்யவில்லை என்பதே அதற்கான பதில். படம் ஆரம்பித்து, முதல் பாதி முடியும் வரையிலான காமெடிகள் எவையும் ஒர்க் அவுட் ஆகவில்லை. வெறுமெனே காட்சிகள் நகர்ந்து செல்கின்றன. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், வடிவேலுவின் கம்பேக் என்ற பெயரில் முந்தைய படங்களில் அவர் பேசி பிரபலமான வசனங்களை அந்தக்காட்சிகளுக்குள்ளே நுழைத்திருக்கிறார்கள். அவை ஒரு இடத்தில் கூட கனகச்சிதமாக பொருந்த வில்லை.

வடிவேலு நடிப்பில் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும், பழைய படங்களில் வரும் அதே டெம்ப்ளேட் பாணியிலேயே அவர் நடித்திருந்தது.. நம்மை புதிதாக ஏதும் இல்லையா? என்ற கேள்வியை கேட்க வைக்கிறது. வடிவேலுவை தாண்டி படத்தில் பல காமெடியன்கள் இருந்தாலும், நம் மனதில் நிற்பது என்னவோ.. ஆனந்த் ராஜூம், கிங்ஸ்லியும்தான். கிங்ஸ்லியும் நடிப்பிலும் பெரிதான எந்த மாற்றமும் இல்லை. பிரசாந்தின் நடிப்பு சிரிக்க வைத்தது.

இராண்டாம் பாதி நாயை எப்படி மீட்கிறார்கள் என்ற ப்ளாட்டில் செல்வதால் படம் கொஞ்சம் என்கேஜ் ஆகிறது. குறிப்பாக இராண்டாம் பாதியில் ஆனந்தராஜ் இடம் பெறும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. பிக்பாஸ் ஷிவானி எல்லா படங்களில் வருவது போல கிளாமர் என்ற வெற்று ஊறுகாய்க்கே இதிலும் பயன்பட்டு இருக்கிறார்.

சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘தலைநகரம்’ ‘மருதமலை’ உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் காமெடிகள் முத்திரை பதித்தவை. அப்படியிருக்கையில் அவரும்,வடிவேலும் இணையும் படம் எப்படி அமைய வேண்டும். முதல் காட்சியே முத்தின கத்திரிக்கையாய் கொடுத்திருந்தார் சுராஜ். சில காட்சிகளை தவிர்த்து பெரும்பான்மையான காட்சிகளில் சுவாரசியம் என்பதே இல்லை.

கதாபாத்திரங்களுக்கான காமெடி முக்கியத்துவத்தையும் அவர் சரியாக கொடுக்க வில்லை. சந்தோஷ் நாரயணனின் இசை ஓகே என்றாலும், அவரின் பழைய படங்களில் இருந்த முத்திரை இதில் இல்லாதது ஏமாற்றம். வடிவேலு மிகப்பெரிய காமெடி ஜாம்பாவன் என்றாலும், அவர் நின்று விளையாடுவதற்கும் சரியான களம் வேண்டும். அந்த சரியான களத்தை சுராஜ் அமைத்து கொடுக்க வில்லை என்பதே இங்கே துருத்தி நிற்கும் உண்மை. சுயபரிசோதனை செய்யுங்கள் வடிவேலு.

சந்தோஷ் நாராயணனின் இசை டிரெய்லரைப் புதுமையாகக் காட்டுகிறது, மேலும் அவர் படத்தின் மூலம் இரட்டிப்பு ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘நை சேகர் ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது மற்றும் தயாரிப்பாளர்கள் அதை மீண்டும் ட்ரைலர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். காட்சிகள் மற்றும் உரையாடல்கள் டிரெய்லரில் இருந்து சிறப்பாக அமைந்தன, மேலும் இது ஒரு சில பொழுதுபோக்கு நட்சத்திரங்களின் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இயக்குனர் சுராஜ் வடிவேலுவுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை எடுத்துச் சென்றுள்ளார், மேலும் நகைச்சுவை நடிகரின் மறுபிரவேசம் அட்டகாசமாக இருக்கும்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மாமணன்’ படத்தின் வெளியீட்டிற்காக வடிவேலு காத்திருக்கிறார். ராகவா லாரன்ஸுடன் இணைந்து ‘சந்திரமுகி 2’ படத்திலும் நடித்து வருகிறார்

சமீபத்திய கதைகள்