இயக்குனர் எச் வினோத், அஜித் குமார் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் இணைந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, 2023 பொங்கலின் போது தளபதி விஜய்யின் வாரிசு உடன் துனிவு பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது
அந்த வகையில் சில்லா சில்லா என்ற பாடல் வருகின்ற 9ம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறியுள்ளார்கள். இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இயக்குனர் வினோத் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் பேட்டி ஒன்றில் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் கதையை கேட்காமல் நடிப்பதாக கூறியதாகவும் முதலில் இப்படத்தின் ஒரு சீனை சொல்லி தான் அஜித்திடம் ஓகே வாங்கியதாகவும் ஆனால் துரதிஷ்டமாக அஜித்துக்கு மிகவும் பிடித்த அந்த சீன் படத்தில் இடம்பெறவில்லை என கூறினார்.
மேலும் நடிகர் அஜித் தான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த மற்றும் சிறந்த படம் எது என்பதை பற்றி வினோத்திடம் கூறினாராம். மேலும் அவர் கூறுகையில் நான் நடித்ததிலேயே சிறந்த படம் நேர்கொண்ட பார்வை தான் என்றும் அந்த படத்தின் மூலம் தான் தனது ரசிகர் வட்டம் பெரியதானதாகவும் கூறினாராம்.
மேலும் மேற்கொண்ட பார்வை கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் அந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார் மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் வக்கீலாக நடிக்க பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் நாளை துணிவு படத்தின் முதல் சிங்களான சில்லா சில்லா சாங்கின் ப்ரோமோ வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது .இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது எச் வினோத் எழுதி இயக்கிய துணிவு, போனி கபூர் தயாரித்த ஆக்ஷன் த்ரில்லர். இப்படத்தில் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். துனிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.