26 C
Chennai
Sunday, February 5, 2023
Homeசினிமாஜெட் வேகத்தில் ‘துணிவு’ பட புரோமோஷனுக்கு தயாரான அஜித்! அதிரிபுதிரியாக ரெடியாகும் துணிவு படக்குழு ...

ஜெட் வேகத்தில் ‘துணிவு’ பட புரோமோஷனுக்கு தயாரான அஜித்! அதிரிபுதிரியாக ரெடியாகும் துணிவு படக்குழு !

Date:

தொடர்புடைய கதைகள்

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’...

கடந்த ஆண்டு வெளியான ‘மாமனிதன்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக...

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி...

2023 தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிஸியான ஆண்டாகத் தெரிகிறது, ஏனெனில் பெரிய...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் முதல் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட்...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும்...

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏகே 62 படத்தில்...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள...

லோகேஷ் இயக்கிய விக்ரம் படமே மகிழ் திருமேனி படத்தின்...

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக 'தளபதி 67'...

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துணிவு’ பொங்கல் பண்டிகையின் போது ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னதாக படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர், இப்போது இயக்குனர் வினோத் அதன் மூன்றாவது போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.


இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நவம்பர் 29ஆம் தேதி முடிவடையும் என கூறப்படுகிறது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த படத்தில் அஜீத் ஒரு கிக்காஸ் நடன காட்சியை நடித்துள்ளார் என்று படத்தின் பல துணை நடிகர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.

துணிவு படத்தின் தமிழ் நாட்டு தியேட்டர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதுவே துணிவு படத்திற்கு கூடுதல் சிறப்பு என படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. மேலும் இன்னும் படத்தில் ஒரு பாடலே படமாக்க வேண்டியிருப்பதால் அந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு என்ன முடிவு செய்யப்போகிறது என்று ரசிகர்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைவரும் காத்திருந்தனர். ஏனெனில் எந்த ஒரு வெளிவிழா, பிரஸ் மீட் என எதிலும் கலந்து கொள்ளாத அஜித் எப்படி புரோமோஷனில் கலந்து கொள்ளப்போகிறார் என்று அனைவரும் ஆச்சரியம் கலந்த பிரமிப்பில் இருந்தனர்.

அந்த சமயத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு ட்விட்டை பதிவிட்டார். அதாவது ‘ஒரு நல்ல படமே அந்த படத்திற்கு புரோமோஷனாகும்’ என்று பதிவிட்டிருந்தார். அஜித் என்ன நினைக்கிறாரோ அதை அவரின் மேலாளர் மூலமாக தெரிவித்துவிடுவார் அஜித். அதன் மூலம் இந்த பதிவிலிருந்து அஜித் புரோமோஷனுக்கு வரமாட்டார் என்று தெரிய வந்தது.

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இந்த சூழலில் இணையத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அவுட்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள், துணிவு படத்தின் போஸ்டர்கள் என எதாவது இணையத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் இது நாள் வரை எந்த ஒரு சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்திராத ஷாலினி திடீரென இன்ஸ்டாவில் புதிய கணக்கை தொடங்கியிருப்பது துணிவு படத்திற்கான புரோமோஷனுக்காக கூaட இருக்கலாம் என சில தகவல்கள் கூறுகின்றன.

மேலும் நேரில் புரோமோஷனுக்கு கலந்து கொள்ள விருப்பமில்லாத அஜித் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இணையம் வழியாக புரோமோஷனுக்கான வேலைகளில் இறங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் அஜித் ரௌடிகளிடம் சிக்கி கெத்தா உட்கார்ந்திருக்கும் மாதிரியான போஸில் ஸ்டில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து அஜித்தின் புரோமோஷன் ஐடியா இது தான் போல என தெரிகிறது. போஸ்டரை வெளியிட்டு புரோமோஷனை முடித்துக் கொள்ள பார்க்கிறார் அஜித் என சில கமெண்ட்களும் வருகின்றன.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நவம்பர் 29ஆம் தேதி முடிவடையும் என கூறப்படுகிறது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த படத்தில் அஜீத் ஒரு கிக்காஸ் நடன காட்சியை நடித்துள்ளார் என்று படத்தின் பல துணை நடிகர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.


‘துணிவு ’ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் படத்தின் கதை பஞ்சாப் வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டுள்ளது. அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அஜய், சிபி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
வேலையில், ‘துணிவு’ படத்திற்குப் பிறகு, அஜித் தனது அடுத்த படத்திற்கு தற்காலிகமாக விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ என்று பெயரிடப்பட்டுள்ளார். இப்படம் ஜனவரி 2023ல் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்