Thursday, November 30, 2023 4:26 pm

போடுறா வெடிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த துணிவு படத்தின் புதிய அப்டேட் இதோ !! !! கொண்டடத்தில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள தமிழ் படங்கள்!

இந்தாண்டு நடைபெறும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அயோத்தி,...

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் : ரசிகர்கள் கொண்டாட்டம்

நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது....

கள்ளி பால்ல ஒரு டீ படத்தின் ட்ரைலர் இதோ !

கல்லி பால் லா ஒரு டீ என்ற பெயரில் பா.ரஞ்சித் ஒரு...

ஜி.வி.பிரகாஷின் ரெபலின் முதல் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரெபெல் படத்தின் முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

துணிவு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எச் வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணையும் படம். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.படத்தின் சில பேட்ச் வொர்க்குகள் மற்றும் படத்தின் சில்லா சில்லா பாடலின் சூட்டிங் மட்டும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் சூட்டிங் தற்போது ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஐதராபாத்தில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட்கள் போடப்பட்டு சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டன. தொடர்ந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போன நிலையில் தற்போது ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் பாங்காக் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படத்தின் சில பேட்ச் வொர்க்குகள் சென்னை மவுண்ட்ரோடில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சில்லா சில்லா என்ற பாடலின் சூட்டிங் கடந்த சில தினங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் இந்தப் பாடலின் சூட்டிங்கும் நிறைவடையும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் சிறப்பான பாடலாக உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளதாகவும் இதற்காக பச்சை பசேல் மற்றும் பனிப்படர்ந்த பின்னணியில் சூட்டிங் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் முரட்டு குத்து பாடலாக உருவாகி வருவதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் சூட்டிங்கை மொத்தமாக படக்குழு முடிக்கவுள்ளதாகவும் வரும் டிசம்பர் 1ம் வாரத்தில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்ட நிலையில் 160க்கும் மேற்பட்ட நாட்கள் எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் தொடர்ந்து படக்குழு சூட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தியது.

தொடர்ந்து அஜித் 61 படத்தின் டைட்டில் துணிவு என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகின. இதனிடையே தற்போது இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு தெரிவித்து வருகிறது. நேற்றைய தினம் இந்தப் படத்தின் பாடல் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் டைரக்டர் விக்னேஷ் சிவன், சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே62 படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித். இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் எடுக்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை கொடுத்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து எந்தமாதிரியான கதைக்களத்தில் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தளபதி விஜய்யின் வாரிசு படமும் துணிவு வெளியாகும் அதே நாளில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க ஜனவரி 12ம் தேதி இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதை விநியோகஸ்தர்கள் தவிர்க்கலாம் என்று பேசப்படுகிறது. இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் தமிழகத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த துணிவு படத்தின் ட்ரைலர் ஆனது புத்தாண்டு அன்று சரியாக 12 மணியளவில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது .இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது

எச்.வினோத் இயக்கிய துனிவு, 1987-ல் பஞ்சாபில் நடந்த நிஜ வாழ்க்கை வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது. அப்போது லூதியானாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் ரூ.5.7 கோடி திருடப்பட்டது, இந்தக் குற்றம் மிகப்பெரிய வங்கியாக வர்ணிக்கப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டில் திருட்டு. இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல்முறையாக மஞ்சு வாரியர் நடிக்கிறார், வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்