எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ‘துணிவு’ படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரத் திட்டமிட்டுள்ள நிலையில், படக்குழு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சமீபத்திய விஷயம் என்னவென்றால், படக்குழு இன்று ஒரு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. படத்தின் அறிமுகப் பாடலான ‘சில்லா சில்லா’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
சில்லா சில்லா என்ற பாடலை வைசாக் எழுதி, ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ளார். அதிவேக நடனம் என்று கூறப்படும் இந்த பாடலில் அஜித்துடன் பாடலாசிரியர் வைசாவும் இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இதுநாள் வரை நகரம் அல்லது சிட்டியை அடிப்படையாக வைத்து படம் இயக்கி வந்த வினோத், அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஒரு பக்கா கிராமத்தை காட்டவுள்ளாராம். ஒருவேளை படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இது இடம் பெற்றிருக்கும் என கருதப்படுகிறது. அஜித் நடித்து வெளியாகி ஹிட் அடித்த வீரம், விஸ்வாசம் ஆகிய படங்கள் கிராம பின்னணியில் உருவானவைதான்.
அதோடு, இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவும் வசனங்கள் அதிகம் இடம் பெற்றிருக்கும் எனவும் வினோத் ஏற்கனவே கூறியிருந்தார்.
விஸ்வாசம் படத்திற்கு பின் கிராம காட்சிகளில் அஜித் நடிக்கவுள்ளது அவரின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.