Thursday, June 13, 2024 4:42 pm

அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை மெய் சிலிர்த்து போன சிவகார்த்திகேயன் !! உண்மையிலேயே நடந்தது என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி ஷங்கருடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அவர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அயலான் மற்றும் வெங்கட் பிரபுவுடன் ஒரு படமும் தயாராக உள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியான நிலையில், ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய ரோலில் நடிக்கிறாரா என கேள்விகள் கிளம்பின.


இந்நிலையில், திடீரென அஜித்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், ஜெயிலர், துணிவு இரு படங்களும் ஒரே இடத்தில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இருந்து ஷாருக்கானைபோல மிகவும் போராடி முன்ணணி முதல்வரிசை நடிகராக வந்திருப்பதை ரஜினியும் அஜித்தும் தங்களைப்போன்ற ஒருவன் வெற்றி பெற்றிருப்பதை தங்களுடைய வெற்றியாகவே பார்க்கின்றனர்

ஓவ்வொரு படத்துக்கும் தலைவர் பேசி பாராட்டுவது தனக்கு உத்வேகத்தை அளிப்பதாக சிவகார்த்திகேயன் பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்துக்கு சமூகவலைதளங்களிலும் யூடியூப்போன்ற காணொளிகளிலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை விரும்பாத கண்ணுக்குத்தெரியாத எதிரிகளால் பலத்த எதிர்ப்பு வந்தது.

இதனால் எப்போதும் மிக சாதாரணமாக கடந்துபோகும் சிவகார்த்திகேயன் நான்கு புறமும் வந்த எதிர்ப்பால் இதை எப்படி எதிர்கொள்வது என்கிற சிந்தனையில் இருந்தபோது ஒரு நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அஜித் வந்திருந்தார். அப்போது அஜித் நேராக சிவகார்த்திகேயனை தோள்மீது கைபோட்டு இதுபோன்ற நேரங்களில் மனம் தளர வேண்டாம் சிவா நீங்க பெரிய உயரத்துக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது. இப்போதுதான் உங்களுக்கு யார் நல்லவங்க யார் எதிராளி என்கிற அனுபவமும் வரும்.

இதை பாசிட்டிவ்வா எடுத்துக்கோங்க கவலைபடவேண்டாம் என்று ஆறுதல் கூறியதால் சிவகார்த்திகேயன் மனதளவில் உற்சாகமும் அஜித் சார் நம் மீது இவ்வளவு அக்கறையுடன் இருக்கின்றாரே என்று நெகிழ்ந்து போனாராம். இந்த நிகழ்வு குறித்து சிவா தனது நண்பர்களிடம் அஜித் சார் ஒரு அண்ணனைபோல பேசினார் என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றாராம்

ரஜினி அஜித் போன்ற தானாகவே வென்ற சயம்பு சிவகார்த்திகேயன் என்பதை தலைவர் மற்றும் தல அங்கீகரித்ததை ப்ரின்ஸ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தங்களது பிரின்ஸ்க்கு பக்கபலமாக கருதுகின்றனர்


கோலிவுட்டின் இளம் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அஜித்தை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் அஜித் ரசிகர்களையும் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

நீண்ட நாள் கழித்து ஏகே சாரை மீண்டும் சந்தித்துள்ளேன். அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டதும், அவர் சொன்ன பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி என கேப்ஷன் கொடுத்து அந்த புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு படங்களின் படப்பிடிபுகளுமே சென்னையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அஜித் – ரஜினி சந்திப்பு நிகழுமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் – அஜித் சந்திப்பு நடைபெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பக்கம் மாவீரன் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் மீண்டும் அயலான் படத்தை ஆரம்பித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கிடையே ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் அஜித்தையும் சந்தித்து இருப்பது ஏதோ வெயிட்டா செய்ய போகிறார் என்கிற எண்ணத்தை தோன்ற வைத்துள்ளது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்துடன் துணிவு மோத உள்ள நிலையில், இந்த பொங்கல் கிளாஷ் பாக்ஸ் ஆபிஸ் கிங் யாரு என்பதை நிரூபிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒரு மில்லியன் லைக்களை அள்ளியது . மறுபுறம் அஜீத் குமாரின் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்