Friday, April 19, 2024 4:59 am

போடுறா வெடிய துணிவு படத்தின் ரீலிஸ் தேதியை லாக் செய்த அஜித் !! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, அஜய், வீரா, மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள துணிவில் நீரவ் ஷா ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு, சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட்.

இப்படத்தில் முதன்முறையாக ஜான் கொக்கன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவரும் அஜித்தும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி மிக பெரிய ரீச்சை பெறும் என்றும் அதை தொடர்ந்து ஆக்‌ஷன் காட்சிக்கு தியேட்டரே அதிரும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்காக ஜான் கொக்கன் சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது. சில்லா சில்லா என்னும் பாடலை இப்படத்தில் அனிருத் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்கு பிறகு தை பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படம் மோத இருக்கிறது. இரு ரசிகர்களும் இந்த சந்தோஷத்தை கொண்டாட ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான ‘சில்லா..சில்லா’ பாடலின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாகவும் இதில் அஜித் கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

இந்நிலையில் துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா சிங்கிள் அடுத்த மாதமான டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் 1 அல்லது 4 தேதி வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

தற்போது வந்த தகவல் படி துணிவு படம் ஜனவ‌ரி 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் என கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது .

அஜீத் குமாரின் ‘துணிவு’ படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த வங்கிக் கொள்ளை திரில்லர் படத்தை புகழ்பெற்ற இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். துனிவு 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்