Wednesday, March 29, 2023

இதுதான் டிவிஸ்ட் !துணிவு படத்தின் முக்கிய தகவலை உடைத்த பிரபலம் இதோ !!உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜீத் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் தயாராகி வரும் நிலையில், படத்தின் மேலும் பல அப்டேட்களை அறிய அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில், வரவிருக்கும் பட்டத்து அரசன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பாடலாசிரியர் விவேகா, துணிவில் அஜீத் குமாருக்காக ஒரு பாடலை எழுதியதாக தெரிவித்தார்.

எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜிப்ரானுடனான தொடர்பு குறித்து விவேகா கூறுகையில், “அவர் எனக்கு நல்ல நண்பர். அவரது இசையமைப்பில் என்னால் அற்புதமான பாடல்களை வழங்க முடிந்தது. தாரமே தாரமே (கடாரம் கொண்டானில் இருந்து) 100 மில்லியனைத் தாண்டியுள்ளது. அடுத்ததாக நான் எழுதியது அஜித்குமார் நடித்த துணிவு படத்தின் பாடல்.”

படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கைன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க முதல் பாடலான ’சில்லா சில்லா’-வை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் ஆக்‌ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில், கதை எழுதப்பட்டுள்ளது.

இதில் நடிகர் அஜித் மற்றும் ஜான் கொக்கைனுக்கு இடையில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் நடிகர் அஜித் நடித்து வெளியானப் படங்களிலேயே இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் பேசப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,துணிவு படத்தின் சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதில் குறைவான ஆக்ஷன் மட்டுமே இருக்கும் என்றும், வலிமை படம் போன்று சண்டை ஆக்ஷன் அதிகமாக இருக்காது என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், இதற்கு முன்னர் ரசிகர்கள் அவரை படத்தில் பார்த்துப் பழகியதை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அவரை இப்படத்தில் காணலாம் என்றும் சினிமா வட்டாரதத்தில் பேசபடுகிறதாம். மேலும், இந்த படத்தில் அஜித் குடும்ப உணர்வுகள் குறித்து அதிமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனையடுத்து பாடத்தில் அதிகமாக கெட்ட வார்த்தைகளை அஜித் பேசியுள்ளார். இதற்கு முன்பு மங்காத்தா திரைப்படத்தில் அஜித் அதிகம் கெட்ட வார்த்தை பேசி இருப்பார்.

இப்போதுஅதைபோல் ,துணிவு படத்தில் இன்னும் ஏராளமாக கேட்ட வார்த்தை பேசியுள்ளாராம். படம் தயாராகி முடித்த பிறகு சென்சாருக்கு செல்லும் அப்போது, கேட்ட வார்தைகள் பேசிய அனைத்தும் கட் செய்யப்படும் என கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துனிவு. வரவிருக்கும் படம் ஒரு ஹீஸ்ட் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சு கதாநாயகியாக நடிக்கும் போது, வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷாவும், படத்தொகுப்பு வேலுக்குட்டியும் செய்துள்ளார்.

சமீபத்திய கதைகள்