Friday, April 26, 2024 2:02 am

உலக நாயகன் கமல் நடிக்க மறுத்த கதையில், அஜித் நடித்து மாபெரும் ஹிட் ஆனா படம் எது தெரியுமா..?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்று அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் காத்திருக்கிறது. வதந்திகளின்படி, துனிவு 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகள் நம்பப்படுமானால், துனிவு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் வரிசுவுடன் மோதும். அஜீத், விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதி பல வருடங்கள் ஆகிவிட்டது.

இந்நிலையில் அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை.16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன்.

24 வயதில் பைக் பந்தய வீரர். மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தில் அஜித்தின் முதுகெலும்பு முறிந்துபோனது. ஆனால், இன்றுவரை தனது தன்னம்பிக்கையைக் கைவிட்டதில்லை அஜித்.

அஜித் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் சிட்டிசன். இப்படத்தினை சரவண சுப்பையா இயக்கி இருந்தார். எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் தேவா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றி இருப்பார்.

அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்தில் வாழ்ந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி போய் இருப்பார்கள். அவர்களை பல்லாண்டுகளுக்கு முன்னர் கூட்டுப் படுகொலை செய்ததற்கு சிட்டிசனாக வரும் பழி வாங்குவதே இப்படத்தின் கதையாக இருக்கும். வித்தியாசமான கதைக்களம் 9 விதமான வேடங்கள் என்பதால் படத்தின் இயக்குனர் சரவண சுப்பையா கமலிடம் தான் இந்த கதையை கூறி இருக்கிறார்.

ஆனால், ஹேராம் படத்தில் பிஸியாக நடித்து வந்த கமல் இப்படத்தில் நீள மூடி வைத்து நடித்து வருகிறேன். இப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருவதால் முடித்தவுடன் பண்ணலாம் எனக் கூறிவிட்டார். இயக்குனர் அவருக்காக காத்திருக்கிறார். 3 மாதங்களும் முடிந்து விட்டது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அமர்க்களம் படத்தினை முடித்த் அஜித் முகவரி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

அவரிடம் சென்று கதை சொல்லினாராம் இயக்குனர். உடனே மொத்த ஸ்கிரிப்டையும் அஜித் கேட்டிருக்கிறார். ஆனால் தமிழில் இருந்ததால் அடுத்த 3 நாட்களில் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டு கொடுத்தாராம். இதை தொடர்ந்து சில நாட்களிலே அஜித் படத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாராம்.

அவரை காண சென்ற இயக்குனருக்கு ஒரு ப்ளூ ஹெல்மெட், பேஜருடன் 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வாழ்த்து சொன்னாராம். உங்களுக்கு பிடித்தவாரு படம் எடுங்கள். நீங்க கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுக்க சொல்லி இருக்கிறேன் எனக் கூறி இருக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் சரவண சுப்பையா தெரிவித்து இருக்கிறார்.

துணிவு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எச் வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணையும் படம். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்