Tuesday, November 29, 2022
Homeசினிமாசும்மா மின்னல் வேகத்தில் உருவாகவுள்ள அஜித்தின் அடுத்த படம் !!பலே திட்டம் தீட்டும் படக்குழு.!

சும்மா மின்னல் வேகத்தில் உருவாகவுள்ள அஜித்தின் அடுத்த படம் !!பலே திட்டம் தீட்டும் படக்குழு.!

Date:

Related stories

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் தினசரி ராசிபலன்: நிர்வாகப் பாடங்களில் கவனம் செலுத்தப்படும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். வேலை...

தொரைப்பாக்கம் பகுதிவாசிகள் குப்பை கொட்டுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார்

பல ஆண்டுகளாகத் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதால், பெருங்குடி குப்பை கிடங்கை...

சும்மா நெருப்பு மாதிரி இருக்காரு 🔥 இணையத்தில் படு வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர் இதோ !!

அஜீத் குமாரின் திரையுலக வாழ்க்கையின் மிகப்பெரிய படங்களில் ஒன்றான துணிவு படத்தின்...

‘லவ் டுடே’ தனது டிஜிட்டல் பிரீமியரை டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட உள்ளது

தமிழ் திரைப்படமான ‘லவ் டுடே’ நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி...

மீனவர்கள், படகுகளை விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவில்...
spot_imgspot_img

துணிவு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எச் வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணையும் படம். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கிய அஜித்தும் ஷாலினியும் 2000ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 22 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையில் சிறகடித்து வருகிறது இந்த நட்சத்திர தம்பதி. இந்நிலையில், ஷாலினி நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஷாலினியின் பிறந்தநாளுக்கு சூப்பராக ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார் அஜித். இந்த பர்த்டே பார்ட்டியில் அஜித் – ஷாலினியின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இருவரும் க்யூட்டாக போட்டோவும் எடுத்துள்ளனர். ஷாலினி ஷோபாவில் அமர்ந்திருக்க அவர் அருகில் அஜித் நிற்கிறார். இருவரும் ஸ்மார்ட்டாக சிரித்தபடி இருக்கும் இந்த போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் அஜித் செல்லும் இடமெல்லாம் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். இதெல்லாம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டே இருக்க, இப்போது முக்கியமான பிரபலத்துடனும் அஜித் போட்டோ எடுத்துள்ளார். அஜித்தின் கேரியரில் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா.’ 2011ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அஜித்துடன் ஆக்சன் கிங் அர்ஜுனும் நடித்திருந்தார். இருவருமே நெகட்டிவ் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தனர். இந்நிலையில், அர்ஜுனை சமீபத்தில் சந்தித்த அஜித், அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.

நெகடிவ் ரோல் ஹீரோவாக நடித்திருந்த அஜித்தின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. 24 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி சாதனை படைத்தது. அந்த வகையில் அஜித்தின் கேரியரில் இந்த படம் ஒரு முக்கிய இடத்தையும் பிடித்தது.

இப்படம் வெளிவந்து 11 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட இன்னும் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது. இதனாலேயே வெங்கட் பிரபு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயாராகி இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் படு பிஸியாக இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்தால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது. கூடிய விரைவில் இந்த படத்தை குறித்த முழு விவரமும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நிச்சயம் அஜித் வித்யாசமான கெட்டப்பில் கலக்குவார் என்றும் ரசிகர்கள் நம்பி உள்ளனர்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்று அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் காத்திருக்கிறது. வதந்திகளின்படி, துனிவு 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகள் நம்பப்படுமானால், துனிவு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் வரிசுவுடன் மோதும். அஜீத், விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதி பல வருடங்கள் ஆகிவிட்டது.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories